அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி.......
- Get link
- X
- Other Apps
சுவையும், மணமும் கொண்ட ஸ்ட்ராபரிப் பழம் சருமத்தைச் சுத்தப்படுத்துவதோடு, செரிமாண உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது.
நமது உணவில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பது பழங்கள். பழங்களில் பல நன்மைகள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில சிறப்புப் பண்புகள் இருக்கும். அதில் ஸ்ட்ராபெர்ரிப் பழம் முக்கியமானது.
சருமத்தின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும் தேவையான சத்துக்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ளது. இதே பண்பு, ரத்தத்தில் செல் அழிவை தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பல அவசியமான சத்துகள் ஸ்ட்ராபெர்ரியில் உள்ளது.
அதுமட்டுமல்ல, வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், வைட்டமின் ஏ (Vitamin A), சையனோகோபாலமின், டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற விட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.
நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழம் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள், புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும் பாலும் ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் ஆகியவை தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் சீராக இயங்கவும் பயன்படுகிறது.
சுவையும், மணமும் கொண்ட ஸ்ட்ராபரிப் பழம் சருமத்தைச் சுத்தப்படுத்துவதோடு, செரிமாண உறுப்புகளை சுத்தப்படுத்துகிறது.
அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. சருமத்தை மென்மையாக பராமரிக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இந்தப் பழத்தை உண்ணவேண்டும்.
சருமத்தின் நிறத்தை வெளிறச் செய்யும் தன்மை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழத்தின் நன்மைகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும்.
also read : இளம்பெண்கள் விரும்பி அணியும் ஸ்டைலிஷான ஜீன்ஸ் வகைகள் என்னென்ன?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment