ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?
- Get link
- X
- Other Apps
பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை கண்டறிவது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அங்கு சில அயோக்கியர்களால் அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.
முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் செல்போனில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.
ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை அறியலாம்.
ALSO READ : அறிவியல் உலகில் தடம் பதித்த பெண்கள்......
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment