நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இளம்பெண்கள் விரும்பி அணியும் ஸ்டைலிஷான ஜீன்ஸ் வகைகள் என்னென்ன?

 இன்றைய இளம் பெண்கள் விரும்பி அணியும் உடைகளில் ஒன்று தான் ஜூன்ஸ். இதில் நிறைய வகைகள் உள்ளது, அதில் பெண்களுக்கு பிடித்தமான உடைகள் எனென்ன என்பதை பற்றி பார்ப்போம்.


Slim fit

இந்த வகையான ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் ஸ்டிரெய்ட் கட் ஜீன்ஸ்களி-ன் கலவை ஆகும். இடுப்பு மற்றும் தொடை பகுதியை அணைத்தவாறும், கணுக்கால் பகுதியில் சிறிது தளர்வாகவும் இருக்கும். இணிவதற்கு சவுகரியாக இருக்கும். அனைத்து வகை டி-ஷர்ட்களுக்கும் பொருந்தும்.


Skinny jeans

இந்த வகையானது பார்க்க ஒல்லியாக தெரிந்தாலும் உடுத்துவத்ற்கு சவுகரியமாக இருக்கும் வகையில் இந்த ஜீன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை, இடுப்பில் இருந்து கணுக்கால் வரை அணைத்தபடியே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் இழுவை தன்மையால் உடல் அசைவிற்கு ஏற்றார் போல் இருக்கும்.

மேலும், ஹீல்ஸ் போன்ற காலணிகளோடு சேர்த்து அணிவதற்கு ஏதுவாக இருக்கும். நீளமான கால்கள் உடைய பெண்களுக்கும், ஒல்லியான உடலமைப்பு உடைய பெண்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.


Bootcut jeans

இந்த ஜீன்ஸ் பொறுத்தவரையில், பூட்ஸ் போன்ற காலணிகளுடன் அணிவதற்கு இது ஏதுவாக இருக்கும். இடுப்பில் இருந்து தொடை வரை சற்று பிடித்தவாறும், முழங்காலில் இருந்து சிறிது அகலமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்து உடல் அமைப்புக்கும் பொருத்தமான ஒன்றாகும்.


High Rise jeans

இந்த வகையானது இதன் வடிவமைப்பு இடுப்பிற்கு மேல் அணிவது போல் அமைந்திருக்கும். இந்த வகை ஜீன்ஸ்கள் உயரம் குறைந்த பெண்கள் மற்றும் சற்று தடித்த உடல்வாகுவான பெண்கள் மத்தியில் பிரபலமானது. இது கால்களை உயரமாகவும், தொப்பையை மறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


Straight Leg jeans

இடுப்பில் இருந்து கணுக்கால் வரை நேராக இருக்கும் இது அனைத்து வகை உடல்வாகு கொண்டவர்களுக்கும் பொருந்தும். அணிபவரை உயரமாக காண்பிக்க வல்லது.

இந்த வகை ஜீன்ஸ்கள் அனைத்து நிகழ்வுகளுக்கும் அணிவதற்கு ஏதுவாக இருக்கும். Low rise jeans இந்த வகை ஜீன்ஸ்கள் வெய்ஸ்ட் லைனில் இருந்து சற்றே இறங்கி இருந்தாலும், அனைத்து வகையான கேஷீவல் உடைகளுடனும் ஒன்றிப்போகும்.


Boyfriend jeans

இந்த வகையான ஜீன்ஸ்கள் இது ஆண்கள் அணிவது போல் சவுகரியமாக இருக்கும். ஆகையால் இதற்கு பாய் பிரண்ட் எஜீன்ஸ்ன்ற பெயர் வந்தது. இந்த வகை ஜீன்ஸ்க்ள் கால்களில் பாகி போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், இடுப்பை சுற்றி சற்று இறுக்கமாகவே இருக்கும்.


belt jeans

இடுப்பு பகுதியை மட்டும் அணைத்தவாறு முழங்காலில், இருந்து அகன்று விரிந்து இருக்கும். இது எந்த வகை உடலுக்கும் பொருத்தமான ஒன்றாக தோன்-றினாலும், அகலமான தோள்பட்டை உடையவர்களுக்கு இலகுவானது.


mid rise jeans

இது வெய்ஸ்ட் லைன் என்று சொல்லப்படும் இடுப்பு பகுதியில் இருந்து ஆரம்பம் ஆகும். இந்த வகை ஜீன்ஸ்கள் அணிவதற்கு சவுகரியமாகவும், இடுப்பு பகுதியை சற்றே அகலமாக காண்பிக்கும் வகையிலும் இருக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!