நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான "ஜேம்ஸ் வெப்" வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டது..!

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
பாரிஸ்,

விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளை பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. விண்ணில் இருப்பதை அறிய தொலைநோக்கி முக்கியமானது ஆகும். தொலைநோக்கியின் உதவியுடன் முன்னாள் வானியல் ஆய்வாளர்கள் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

வளர்ந்துவரும் காலத்தில் நவீன தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்கு முக்கியமானதாக இருந்தது. ஆனாலும் காற்றுமாசு, வளிமண்டல தூசுகள் காரணமாக பூமியிலிருக்கும் தொலைநோக்கிகள் மூலமாக விண்வெளி நிகழ்வுகளை துல்லியமாக பார்க்கமுடிவதில்லை. 

இதன் காரணமாக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்திட வழி வகுத்தது. 

தற்போது அதன் அடிப்படையில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்த உள்ளனர். 1989 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000 களின் முற்பகுதியில், விண்வெளியில் ஏவப்படும் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். இந்த விண்வெளி தொலைநோக்கி பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தினர்.

இந்த விண்வெளி தொலைநோக்கியை நேற்று விண்ணில் செலுத்த இருப்பதாக விஞ்ஞானிகள் முன்பு கூறினர். ஆனால் சரியில்லாத வானிலை காரணமாக இன்று விண்ணில் செலுத்த திட்டமிட்டனர். அதன்படி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த இன்று மாலை 5.50 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்த விண்வெளி தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்தாட பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!