போர் அடிக்குதே… 7.5 கோடி ஓவியத்தை பால் பாயிண்ட் பேனாவை வைத்து காலி செய்த செக்யூரிட்டி
- Get link
- X
- Other Apps
செக்யூரிட்டியால் சிதைக்கப்பட்ட ஓவியம், அன்னா லெபோர்ஸ்காயாவின் Three Figures ஓவியமாகும். 1930 களில் வரையப்பட்ட இந்த ஓவியம், 7.5 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது.
ரஷ்யா ஆர்ட் கேலரியில் 7,40,000 பவுண்ட் மதிப்பிலான ஓவியத்தை, அதை பாதுகாக்க நியமித்த செக்யூரிட்டியே, சின்னாம்பின்னம் ஆக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தி ஆர்ட் நியூஸ்பேப்பரின் கூற்றுப்படி, அந்த செக்யூரிட்டு பால் பாயிண்ட் பேனாவை உபயோகித்து, அன்னா லெபோர்ஸ்காயாவின் ஓவியத்தில் முகமற்ற உருவங்களின் மீது கண்களை வரைந்துள்ளார். நீண்ட நேரமாக கேலரியில் சும்மா இருந்ததால், போர் அடிக்குதேனு இச்செயலில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஸ்புட்னிக் நியூஸ் தகவலின்படி, ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கில் உள்ள யெல்ட்சின் மையத்திற்குச் சென்ற இருவர், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற ஓவியமான ‘த்ரீ ஃபிகர்ஸ்’அழிக்கப்பட்டிருப்பதை பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். 1930 களில் வரையப்பட்ட இந்த ஓவியம் 740,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 7.5 கோடி) காப்பீடு செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு அதிகாரி குறித்து தகவல் வெளியாகவில்லை. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நபர் ஒரு வருடம் சிறை தண்டனையும், பெரிய தொகையை அபராதமாகவும் செலுத்த வேண்டியிருக்கும்.
இதுகுறித்து யெல்ட்சின் சென்டர் வெளியிட்ட அறிக்கையில், அன்னா லெபோர்ஸ்காயாவின் ஓவியத்தில் உள்ள உருவங்களில் கண்களை வரைந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், எங்கள் மையத்தின்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு தனியார் பாதுகாப்பு அமைப்பின் ஊழியர் ஆவர்.
நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, சேதமடைந்த கலைப்படைப்பு மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டு, அங்கு மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பால்பாயிண்ட் பேனாவின் தாக்கம் “வலுவான அழுத்தம் இல்லாமல்” இருந்ததால் ஓவியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும். ஓவியத்தை இன்னும் காப்பாற்ற முடியும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த தகவல் பரவ தொடங்கியதுமே, நெட்டிஸ்சன்களை மீம்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். சிலர் கண்களுடன் அந்த புகைப்படம் அழகாக இருப்பதாக பதிவிடுகின்றனர்.
ALSO READ : நியூயார்க்: படிக்கட்டுக்கு அடியில் ரகசிய அறை! 2 ஆண்டுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment