நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

WhatsApp டெலிட் ஆன மெசேஜ்களை மீண்டும் படிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

வாட்ஸ்அப் செயலியில் ஒருவர் அனுப்பிய செய்திகளை டெலிட் செய்த பிறகு மீண்டும் அதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.


வாட்ஸ்அப் அம்சம்:

வாட்ஸ்ஆப்ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் பிராந்திய மொழிகள் மூலம் 100 எம்பி கோப்புகளையும் வாட்ஸ்ஆப்-ல் எளிதாக பகிர முடியும். இதன் மூலம், PDF கள், ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடு காட்சிகள் மற்றும் இது போன்ற பல ஆவணங்களையும் பகிர முடியும்.

ஆனால் வாட்ஸ்ஆப் பில் ஒருவர் நமக்கு அனுப்பிய செய்திகளை அழித்து விட்ட பிறகு அதை மீண்டும் நாம் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் இருக்கும். ஆனால் வாட்ஸ்ஆப்ல் இதற்கான அம்சத்தை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. அழித்து விட்ட செய்திகளை நாம் அறிந்து கொள்வதற்கு என்று நாம் தனியாக மூன்றாம் தரப்பு செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்காக பலமுறைகள் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் Play Store-இல் இருந்து, நீங்கள் WhatsDelete என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இந்த செயலி மொபைலில் இயங்குவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டும். இனி தான் செயலி தன் பணியை தொடங்கும். இதற்காக முதலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்:

முதலில் உங்கள் மொபைலில் settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

அதில், டேட்டா அண்ட் ஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், மீடியா ஆட்டோ டவுன்லோடுக்குச் சென்று அனைத்து விருப்பங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

இனி உங்கள் அனைத்து கோப்புகளும் தானாக பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும். இனி உங்கள் அழிக்கப்பட்ட செய்திகள், ஆடியோ, வீடியோக்களை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்