தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம்! கிராமத்து ஸ்டைலில் இனி குடிங்க...!
- Get link
- X
- Other Apps
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி திப்பிலி – 10
- கண்டதிப்பிலி – சிறிதளவு
- மிளகு – 10
- காய்ந்த மிளகாய் – 1
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- சீரகம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் விட்டு வறுக்கவும்.
பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.
இந்த அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை மிக்ஸ் செய்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் கொதிக்கவிடவும். இதற்கிடையில், மற்றொரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
பிறகு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அவற்றை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான திப்பிலி ரசம் தயார்.
இந்த அற்புத ரசத்தை பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
ALSO READ : கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை இரண்டே வாரத்தில் அடித்து விரட்ட இதை மட்டும் இப்படி தேயுங்கள்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment