நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதலை சொன்ன இடத்திற்கே சென்று உயிரை விட்ட நபர்! அரங்கேறிய சோக சம்பவம்;

 27 வருடம் கழித்து தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கே நபர் ஒருவர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இங்கிலாந்தின் அல்ட்ரிஞ்சம் பகுதியை சேர்ந்தவர் Dr.ஜேமி பட்லர் (Jamie Butler 54). இவரது மனைவி ஸ்ட்ரைடிங் எட்ஜ். இந்த தம்பதிகளுக்கு இரண்டும் இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவிக்கு காதலை வெளிப்படுத்த ஆசைப்பட்டுள்ளார். அதன்படி இருவரும் முதன் முதலில் காதலை வெளிப்படுத்திய இடமான மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.

அப்போது மனைவி ஒரு இடத்தில் களைத்துபோய் உட்கார்ந்திருக்க, கணவனோ சும்மா இல்லாமல் காதலை சொன்ன இடத்தை தேடிச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் கணவனை காணததால், எல்லா இடமும் தேடிச்சென்றுவிட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார்.

அவரை தேடிய மீட்பு படையினர்கள், மலை உச்சியில் இருந்து கீழே கிடப்பதை கண்டுள்ளனர். பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பட்லர் உயிரிழந்த நேரத்தில் அவர் கால் பந்து அணியில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவரின் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் மனமுடைந்து அவரை உயிரை மாய்த்துகொண்டாரா? என நீதிமன்ற விசாரணை நடக்கையில், அவர் அப்படி எதுவும் செய்யவில்லை தவறி தான் விழுந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், காதல் கணவர் இப்படி உயிரிழந்த சோகத்தால் மனைவி பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.



ALSO READ : கெட்ட வார்த்தையால் பேசி மிரட்டும் பேய்! 233 ஆண்டுகளுக்கு நடந்த சம்பவம் என்ன?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!