நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆண்ட்ராய்டு 13 வெர்சன் எப்போது? கூகுள் நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ்!

 ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தற்போதைய மார்க்கெட்டுகளில் நிறைய வந்துவிட்டன. கூகுள் நிறுவனம் இதுவரை ஆண்ட்ராய்டு 12 வெர்சன் ஓஎஸ்களை வெளியிட்டு இருக்கிறது.


இதனிடையில், தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்யை வெளியிட உள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 13 ஆனது குறிப்பிட்ட டெவலப்பர்களுக்கு மட்டுமே வழங்க உள்ளது.

இந்த ஓ.எஸ்ஸின் பீட்டா வெர்ஷன் ஏப்ரல் மற்றும் அதற்கு பின் வரும் மாதங்களில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு வெர்சன்களுக்கு வழக்கமாக கூகுள் உணவு வகைகளின் பெயர்களை வைக்கும்,

ஆனால் இந்த முறை ஆண்டாய்டு 13-க்கு ‘டிராமிசூ’ என்ற இத்தாலி உணவு வகையின் பெயரை சூட்டியுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 13-ல் செயலிகளை பயன்படுத்த அருகில் உள்ள வைஃபை கருவிகளை இணைக்கும்போது ரன் டைம் அனுமதி கேட்கப்படுமாம்.

இந்த புதிய ஓஎஸ்ஸில் முன் இருந்ததை விட சிறந்த தீம்கள், செயலிகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில் மேம்பாடு, சிறந்த தனியுரிமை அம்சங்கள், மொழி கட்டுப்பாடுகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ALSO READ : வீட்டிலிருந்தபடியே அட்டகாசமாய் பணம் ஈட்டலாம்: Instagram அளிக்கும் சூப்பர் வாய்ப்பு....

Comments

Popular posts from this blog

முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?