நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புருவ முடி அடர்த்தியாகவும் வேகமாவும் வளர என்ன செய்யலாம்? இதோ சில எளிய டிப்ஸ்

பொதுவாக புருவங்களை மெருகேற்றும்போது அது முகத்திற்கு கூடுதல் பொலிவையும் இளமையையும் அளிக்கும்.

புருவங்களை மெருகேற்ற வேண்டுமெனில் முடி அடர்த்தியாக வளர வேண்டும். என்னதான் செயற்கையாக பென்சிலில் புருவங்கள் வரைந்து அழகு செய்தாலும் அதில் அத்தனை அழகு மிளிராது.

அந்தவகையில் புருவங்களை நன்கு அடர்த்தியாக வளர உதவும் சில எளிய வழிகள் குறித்துக் காண்போம்.


விளக்கெண்ணெயை விரலால் தொட்டுக் கொள்ளவும். பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும். பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும். இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் வெந்தய விதைப் பொடியை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும். இந்த கலவையை 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும். இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் புருவங்களைக் கழுவுங்கள். இந்த செயலை வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த செயலை தினமும் ஒருமுறை செய்து வர நல்ல பலனைக் காணலாம்.

கற்றாழையின் ஜெல்லை இரண்டு புருவங்களின் மீதும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலை தினமும் செய்து வர, புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.

பெட்ரோலியம் ஜெல்லியை புருவங்களின் மீது தடவ வேண்டும். பின் இதனை 15-20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வருவது நல்லது.

பாலை பஞ்சுருண்டையில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும். பின்பு 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் 2-3 முறை என தினமும் செய்ய புருவங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

தேங்காய் எண்ணெயை புருவங்களின் மீது தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள். இறுதியில் கிளின்சர் பயன்படுத்தி, புருவங்களை நன்கு கழுவுங்கள்.

சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதன புருவங்களின் மீது தடவ வேண்டும் பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, கிளின்சர் பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலை வாரத்திற்கு 4-5 முறை பின்பற்ற, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின் 40-45 நிமிடம் நன்கு ஊற வைத்து, மேக்கப் ரிமூவர் கொண்டு எண்ணெயை துடைத்து எடுங்கள். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!