விராட் கோலியை மிஞ்சிய நபர்! குடிநீருக்காக மாதம் ரூ.1.5 லட்சம் செலவு செய்கிறாராம்...
- Get link
- X
- Other Apps
குடிநீர் இல்லாமல் ஒரு மனிதன் உயிர் வாழ முடியாது.. ஆனால் குடிநீரில் கிடைக்காமல் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் வறட்சியில் வாடி வருகின்றனர்.
இயற்கையான குடிநீரை அருந்தவேண்டும் என தண்ணீரின் சுத்தம், மட்டுமல்லாமல் இயற்கை பாதுகாப்பு குறித்தும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ராயன். இதனால், தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கும் நிறுவனத்திடம் இருந்துதான் அவற்றை வாங்குகிறார்.
குடித்த முடித்த தண்ணீ கேனை மறுசுழற்சிக்கு ராயன் (Ryan Dubs) அனுப்பி வைத்து விடுகிறார்.இயற்கையை நேசிக்கும் ராயன் வீட்டில், பாட்டில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகவே 4 ஃபிரிட்ஜ்கள் உள்ளன.
வோஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து தான் இதை வாங்குகிறார். இதற்காக அவர் இரண்டாயிரம் அமெரிக்க டாலர்களை செலவு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ராயன் “நான் எப்போதும் தூய்மையான நீரை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஆனால், நீங்கள் எல்லாம் நரகத்தில் இருப்பதை போல் அசுத்தமான நீரை அருந்தி வருகிறீர்கள்.
உங்களை போல் என்னால் குழாய் தண்ணீரை குடிக்க முடியாது. கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே நான் விரும்பி குடிப்பேன். எனக்காக நான் செய்து கொள்ளும் ஒரே விஷயம் அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.
ALSO READ : வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுபவர்களுக்காக வந்த செம்ம அப்டேட்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment