90 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள ஆர்ட்வார்க் குட்டி ஈன்றுள்ளது.இங்கிலாந்தின் செஸ்டர் மிருகக் காட்சி சாலையில் உள்ல ஆர்ட்வார்க் 90 ஆண்டுகளுக்குப் பிறகு குட்டி ஈன்றுள்ளது. பெண் இனத்தைச் சேர்ந்த குட்டிக்கு டாபி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செஸ்டர் ஜூ ட்விட்டரில் அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி அன்று, செஸ்டர் ஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய ஆர்ட்வார்க் ஒரு பெண் குட்டி என்பதை நிலவிற்கு மேலே நிற்பது போன்ற மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” என பதிவிட்டுள்ளது. ஆர்ட்வார்க் எப்போதும் பிறந்த குட்டியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் என்பதால் தான் தாயிடம் இருந்து பிரித்து வைத்து பராமரித்து வருவதாகவும், மேலும் எதிர்காலத்தில் அதற்கான தனி காப்பகமும் உருவாக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஹாரி பாட்டர் தொடரின் ஹவுஸ்-எல்ஃப் டாபியின் உருவத்தைப் போல் இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரிய காதுகள், முடி இல்லாத சுருக்கமான தோலுடனும், ராட்சத நகங்களுடனும் பெண் குட்டி பிறந்தது.
செஸ்டர் மிருகக்காட்சிசாலையின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, இந்த பெண் ஆர்ட்வார்க் குட்டி தற்போது தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு, ஊழியர்கள் பராமரித்து வருவதாகவும், ஐந்து வாரங்களுக்கு இரவு முழுவதும் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை அந்தக் குட்டிக்கு உணவளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்துள்ள ஆர்ட்வார்க் பற்றி செஸ்டர் மிருகக்காட்சிசாலையின் குழு மேலாளரான டேவ் வைட் கூறுகையில் "இது மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் ஆர்ட்வார்க், எனவே இது எங்களுக்கு ஒரு முக்கியமான ஒன்றாகும். அதனால் நாங்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறோம். அது பிறந்து அம்மாவுடன் படுத்திருந்த சில மணி நேரங்களிலேயே, அதன் உருவம் ஹாரி பாட்டர் கதாபாத்திரமான டாபியுடன் பொருத்தியிருப்பதை கவனித்தோம். அதனால் தான் அதற்கு செல்லமாக டாபி என பெயர் சூட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
அதன் அம்மாவின் அருகில் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கண்டவுடன், அதன் விசித்திரமான ஒற்றுமையை நாங்கள் கவனித்தோம், அதனால் அதுதான் தற்போதைக்கு இந்த கன்றுக்குட்டிக்கு செல்லப்பெயர்!”
செஸ்டர் மிருகக்காட்சிசாலையின் வலைத்தளத்தின்படி, பொதுவாக ஆப்ரிக்காவின் சப் சஹாரன் காட்டுப்பகுதியில் இந்த ஆர்ட்வார்க்குகள் காணப்படுகின்றன. இவிவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் அதன் கறிக்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் 109 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ட்வார்க் விலங்கினத்தில் புதிதாக தோன்றியுள்ள குட்டிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பார்க்கவே வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் இதற்கு டாபி என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
Comments
Post a Comment