நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா? அப்போ ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதும்!

பொதுவாக தேங்காய் எண்ணெயில் பல பயன்கள் நிறைந்துள்ளது. இதனை நன்கு அறிந்து கொண்ட நமது முன்னோர்கள் சமையல் முதல் தோல் வரை அனைத்திற்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தனர். 

நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள இந்த தேங்காய் எண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தி வருவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமாம். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகளை கரைத்து கல்லீரல் வீக்கம் அடையாமல் தடுக்கின்றது. தினமும் முடிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருவதால் வேர்கள் ஊக்கம் பெற்று கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகின்றது.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடல் சூடாகாமல் எப்பொழுதும் சமமான வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை தருகின்றது. இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்யை தினமும் பற்கள் மற்றும் ஈறுகளில் மசாஜ் செய்தால் பற்கள் பள பளவென்று மின்னும். நாள்தோறும் இரவுகளில் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் முகம் ஜொலிக்கும். அது மட்டும் இல்லாமல் முகத்தில் ஏற்படும் வெடிப்புகள், வறட்சிகள் வராமல் தடுக்க உதவும். 

Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!