நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அவசர காலத்தில் உயிரைக் காக்க உதவும் ஸ்மார்ட்போன் - இதை செய்யுங்கள்!

 ஸ்மார்ட்போன் செட்டிங்ஸில் செய்யும் ஒருசில மாற்றங்கள் அவசர காலத்தில் உங்களின் உயிரைக் காப்பாற்ற உதவும். 


  • ஆபத்து காலத்தில் உதவும் ஸ்மார்ட்போன்
  • செட்டிங்ஸில் செய்ய வேண்டிய மாற்றம்
  • உங்கள் உயிரையும் காப்பாற்ற உதவும்.



நாம் எங்கு சென்றாலும், நம்முடன் ஒரு பொருள் என்றால் அது ஸ்மார்ட்போன் தான். இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், அந்த ஸ்மார்ட்போன் நம்முடைய அவசர காலத்தில் உயரைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம். செட்டிங்ஸில் செய்யும் சிறிய மாற்றம், ஆபத்து காலத்தில் இருக்கும் நம் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதால், அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

அதாவது, போனில் இருக்கும் தொடர்புகளுக்கு (Contacts) செல்லாமலேயே லாக்ஸ்கீரின் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ளலாம். அவசர காலத்தில் லாக்ஸ்கிரீனை நீக்குவதற்கு கூட டைம் இருக்காது. அந்த சமயத்தில் லாக்ஸ்கீரின் வழியாகவே நீங்கள் எமர்ஜென்சி கால் செய்யலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவசரகால தொடர்புகளைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.


உங்கள் போனில் My Info அல்லது 'My Contacts சென்று எமர்ஜென்சி தொடர்புகள் (Emergency Contacts) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை சேர்த்து வைக்க வேண்டும். அந்த தொடர்புகளுக்கு நீங்கள் லாக் ஸ்கீரினில் இருந்தவாறே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஐபோன் வாடிக்கையாளர்களும் இதேபோல் எமர்ஜென்சி தொடர்புகளை சேமித்து வைக்கும் செட்டிங்ஸ் உள்ளது. அதில் தொடர்புகளை சேமித்து வைத்து, அவசர கால உதவிக்கு அழைக்க முடியும். சாதாரணமாக பார்க்கும்போது இந்த தகவல் எளிமையாக தெரியலாம். அவசர காலத்தில் இருப்பவர்களுக்கே அதன் அருமை தெரியும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!