சரும அழகை பராமரிப்பதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களையும், சரியான முறையில் சரும பராமரிப்பையும் மேற்கொண்டாலே போதுமானது.சரும அழகை பேணுவதற்காக விலை உயர்ந்த சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து விதவிதமான அழகு சாதன பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சரும அழகை பராமரிப்பதற்கு அதிக பணம் செலவளிக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களையும், சரியான முறையில் சரும பராமரிப்பையும் மேற்கொண்டாலே போதுமானது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
1. தலையணை உறையை மாற்றுங்கள்:
பெட்ஷீட் மற்றும் தலையணை உறையை அடிக்கடி மாற்றுவது சருமத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனெனில் அவற்றில் எண்ணெய், பாக்டீரியா போன்ற வைரஸ் கிருமிகள், இறந்த சரும செல்கள் போன்ற அழுக்குகள் படிந்திருக்கும். அவற்றை துவைக்காமல் நாட்கணக்கில் உபயோகிக்கும்போது சருமத்தில் படர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முகப்பரு, சரும வெடிப்பு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை தவிர்க்க தலையணை உறைகள், மெத்தை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்.
2. தலையணையில் முகம் பதிக்காதீர்கள்:
உறங்கும் நிலையும் சருமத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். நிறைய பேர் தலையணைக்குள் முகத்தை பதித்து தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். முதுகு பகுதி மெத்தையில் படும்படி தூங்குவதுதான் சரியான நிலையாகும். மெத்தையிலோ அல்லது தலையணையிலோ முகம் பதிப்பது கன்னம் பகுதி முழுவதற்கும் அழுத்தம் கொடுக்கும். அப்படி முகம் பதித்து தூங்குவது முகப்பரு மற்றும் சுருக்கங்களுக்கு வழிவகுக்கும்.
3. உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்:
உடற்பயிற்சி செய்யும் போது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் வியர்வை வடிவில் வெளியேறும். மேலும் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்வது உடலில் ஊட்டச்சத்துக்கள் சீராக செல்லவும், ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் வழிவகுக்கும். சருமம் பிரகாசமாக காட்சியளிப்பதற்கும் வித்திடும். குறைபாடற்ற சரும அழகை பெறுவதற்கு உடற்பயிற்சியை பரிந் துரைக்கவும் செய்கிறார்கள். மார்பக புற்றுநோய் போன்ற சருமம் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி உதவும்.
4. தூக்கம் அவசியம்:
நல்ல தூக்கம் சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும். தினமும் குறிப்பிட்ட நேரத்தை தூங்குவதற்கு ஒதுக்குவது முக்கியமல்ல. அந்த தூக்கம் உடலுக்கும், மனதுக்கும் எந்த இடையூறும் கொடுக்காததாக இருக்க வேண்டும். அப்படி ஆழ்ந்த தூக்கத்தை கடைப்பிடிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் சரும பராமரிப்புக்காக ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியிருக்காது என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. தூக்கத்தின்போது உடலில் ஏற்படும் பழுதை சீர்செய்தல் மற்றும் வளர்ச்சி போன்ற முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன. போதிய தூக்கமின்மை கருவளையம், உடல் சோர்வு, சுருக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தினமும் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமானது.
5. செல்போன் திரையை சுத்தம் செய்யுங்கள்:
கழிவறையை விட செல்போன் திரையில் அழுக்குகள் அதிகம் படர்ந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் உபயோகம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. முகத்தில் பதித்தபடி செல்போனில் பேசும்போது அதில் படர்ந்திருக்கும் அழுக்குகள் சருமத்தில் படிந்துவிடும். அதன் மூலம் முகப் பருக்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
Comments
Post a Comment