தினமும் அலெக்சாவிடம் இதை பற்றி 11 ஆயிரம் கேள்விகளை கேட்ட இந்தியர்கள்… என்ன தெரியுமா?
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு நாளும் 11,520 முறை “அலெக்சா, காலை வணக்கம்” மற்றும் “அலெக்சா, குட் நைட்” என பயனாளர்கள் கூறுகின்றனர்.
அமேசானின் அலெக்சா சாதனத்தை உபயோகிப்போரின் எண்ணிக்கை கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் 68 சதவீதம் அதிகரித்துள்ளது.அதில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருந்து வருகிறார்கள்.
தற்போது, அமேசான் இந்தியா அலெக்சாவின் நான்காவது ஆண்டு விழாவை இந்தியாவில் கொண்டாடுகிறது. இந்நாளில், சில புள்ளி விவரங்களை வெளியீட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையின் போது மார்ச்-ஏப்ரல் 2021 இல், கோவிட், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான தலைப்புகள் குறித்து தினமும் 11,500 கேள்விகள் அலெக்சாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானின் கூற்றுப்படி, அலெக்சா தினசரி விளையாட்டு, திரைப்பட உரையாடல்கள், வார்த்தை வரையறைகள், கடினமான கணித சிக்கல்கள், வானிலை மற்றும் சமீபத்திய பங்குச் சந்தை புதுப்பிப்புகள் தொடர்பான 1.7 லட்சம் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறது.
மேலும், அலெக்சா ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் வீட்டு உபயோகப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கான 2.6 லட்சத்திற்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு பதிலளித்தது
சியோமி, ஒன்பிளஸ், Hindware மற்றும் Atomberg போன்ற பிராண்டுகளின் புதிய தயாரிப்புகளுடன் Alexa ஸ்மார்ட் ஹோம் தேர்வு ஆண்டிற்கு 72 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயனாளர்கள் அலெக்சாவுடன் தங்கள் நாட்களைத் தொடங்குவதையும் முடிப்பதையும் விரும்பிகின்றனர். ஒவ்வொரு நாளும் 11,520 முறை “அலெக்சா, காலை வணக்கம்” மற்றும் “அலெக்சா, குட் நைட்” என கூறுகின்றனர்.
பயனாளர்கள் கேள்வியை புரிந்துகொள்வதில் அலெக்ஸா மிகவும் துல்லியமானது என்றும், தானியங்கி பேச்சு அங்கீகாரப் பிழைகளை 25 சதவீதம் குறைத்ததாகவும் அமேசான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ : எல்லா ஷாப்பிங் மாலும் போயாச்சா… விரைவில் வருகிறது மெட்டாமால்......
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment