நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

30 நாட்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிங்க! அதிசயத்தை கண்கூடாக காணலாம்

உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக நடைபெறுவதற்கு தண்ணீர் இன்றியமையாத காரணியாகும். 
எனவே நாம் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் எண்ணற்ற பலன்கள் ஏற்படும்.

ஒருவர் தொடர்ந்து 30 நாட்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் செயல்முறையை பின்பற்றுவதன் மூலம், அவரது உடம்பில் ரத்த அழுத்தம் சீரான முறையில் இருக்கும்.

நமது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம், நீரில் உள்ள சத்துக்கள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்கிறது.

உடலின் இன்சுலின் அளவு சீராக்கப்படுகிறது. இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடிகிறது.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவதற்கு, முக்கிய காரணம் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். எனவே தினமும் இந்த செயல்முறையை தவறாமல் பின்பற்றி வந்தால், பத்தே நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வருவதன் முலம், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட முடிகிறது. இதனால் என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.  



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!