நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சரும பிரச்சினைகளை நொடியில் சரி செய்ய வேண்டுமா? பாசிப்பயறை இப்படி பயன்படுத்துங்க போதும்

 பொதுவாக பயறு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பயறு வகைகளை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். பயறு என்றவுடன் நினைவுக்கு வருவது பச்சை பயறு தான்.


இது பல ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டது. ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவுகின்றது.

தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.


  • முழு பாசிப்பயறை 2 டீஸ்பூன் அளவு எடுத்து ஊறவைத்து, மறுநாள் மென்மையான பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். இதில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்புன் தேன் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்தால் பளபளப்பான சருமம் கிடைக்கும். 

  • சருமம் வறட்சியாக இருந்தால் 2 டீஸ்பூன் பாசிப்பயறை பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் பேஸ்டாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு பிறகு முகத்தை சுத்தம் செய்தால் சருமத்தின் வறட்சி நீங்கும். சருமத்துக்கு நீரேற்றம் கொடுக்கும்.

  • 4 டீஸ்பூன் பாசிப்பயறை ஊறவைத்து , மறுநாள் காலையில் பேஸ்டாக அரைத்து அதில் 2 டீஸ்பூன் ஆரஞ்சு பொடி , 2 டீஸ்பூன் சந்தனப்பொடி, சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் பளபளப்பு அதிகரிக்கும். தேவையற்ற முடிகள் வெளியேறும்.

  • 4 டீஸ்பூன் பருப்பை ஒரே இரவில் ஊறவைத்து பேஸ்ட் ஆக்கி அரைக்கவும். அதில் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட சருமம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு சருமத்தை மென்மையாக்க குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இது வெயிலினால் பாதிப்படைந்த சருமத்துளைகளை இறுக்க உதவும். சரும எரிச்சலை தணிக்க செய்யும்.

  • 4 டீஸ்பூன் பாசிப்பருப்பை ஒரே இரவில் ஊறவிட்டு மறுநாள் காலையில் மென்மையான பேஸ்ட் ஆக உருவாக்கவும். இதனுடன் 2 டீஸ்பூன் நெய் கலந்து சருமத்தை மென்மையாக மசாஜ் செய்யவும். இது சருமத்தை இளமையாகவும் பருக்கள் இல்லாமல் சுத்தமாகவும் வைத்திருக்க செய்யும்.  



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்