Google Chrome-ல் பிரவுசிங் ஹிஸ்டரி, Cookies, Cache போன்றவற்றை அழிப்பது எப்படி?
- Get link
- X
- Other Apps
உங்கள் Google Chrome பிரவுசரில் Cookies, Cache, பிரவுசிங் ஹிஸ்டரி போன்றவற்றை அழிப்பது எப்படி என இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், Cookies-களை டிராக் செய்து, அதற்கு ஏற்ப ஏராளமான நிறுவனங்கள் நீங்கள் பார்வையிடும் இணையதளங்களில் விளம்பரங்களை காண்பித்து கொண்டிருக்கும்.
இதுபோன்ற காரணங்களால், கூகுள் குரோம் பிரவுசரில் நீங்கள் சில விடயங்களை தேடும்போது, தகவல்கள் கிடைக்க வழக்கத்தை விட கூடுதலான நேரம் எடுத்துக் கொள்கிறது.
கூகுள் குரோமில் எந்த அளவுக்கு கேச்சே சேருகிறதோ, அந்த அளவுக்கு அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதாவது, இதற்குப் பிறகு நீங்கள் உங்களது பிரவ்சிங் ஹிஸ்டரியை கட்டாயம் அழித்தாக வேண்டும்.
அதே சமயம், நீங்கள் எப்போதாவது பார்வையிடும் இணையதளங்கள் சிலவற்றில் சேமித்து வைக்கப்படும் டேட்டாக்களையும் அழித்து விடக் கூடாது.
Cache, Cookies மற்றும் Browsing History போன்றவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்கான வழிமுறைகள் இதோ..
- Android ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள கூகுள் குரோம் பிரவுசருக்கு செல்லவும். ஸ்க்ரீனுக்கு வலது புறம் மேல் கார்னரில் மூன்று புள்ளிகள் அல்லது மெனு என்பது இருக்கும். அதை டேப் செய்யவும்.
- இது உங்களை செட்டிங்க்ஸ் பக்கத்திற்கு கொண்டு செல்லும். அங்கு நீங்கள் ஹிஸ்டரி என்பதை கிள்க் செய்து, க்ளியர் பிரவ்சிங் டேட்டா என்பதை டேப் செய்ய வேண்டும். இதேபோல, பிரைவேஸி மற்றும் செக்யூரிட்டி டேப் கீழ் சென்று அங்கு குரோம் செட்டிங்க்ஸ் மெனுவை தேர்வு செய்வதன் மூலமாகவும் நீங்கள் இதை செயல்படுத்தலாம்.
- ஹிஸ்டரியை டெலீட் செய்ய பேஸிக் மற்றும் அட்வான்ஸ்டு வாய்ப்புகளை கூகுள் குரோம் உங்களுக்கு வழங்கும். ஒட்டுமொத்த பிரவ்சிங் பைல்களையும் நீங்கள் டெலீட் செய்யலாம் அல்லது கடைசி 24 மணி நேரம், கடைசி ஒரு மாதம் என்ற கால அளவிலும் நீங்கள் டெலீட் செய்யலாம். தனித்தனி பைல் ஆகவும் நீங்கள் டெலீட் செய்ய முடியும்.
- இதேபோன்று, சேவ்டு பாஸ்வார்டுகள், ஆட்டோபில் ஃபார்ம் டேட்டா மற்றும் சைட் செட்டிங்க்ஸ் ஆகியவற்றை தேர்வு செய்து, க்ளியர் என டேப் செய்து அவற்றையும் நீங்கள் டெலீட் செய்து கொள்ளலாம்.
- இதை செய்து முடித்தால், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப கூகிஸ் மற்றும் கேச்சே, ஹிஸ்டரி உள்ளிட்டவை உங்கள் சாதனங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கும்.
இதுபோன்று டேட்டாக்களை நீக்கிய பிறகு உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் கூகுள் குரோம் பிரவ்சரின் வேகம் அதிகரிப்பதை நீங்களே பார்க்க முடியும்.
ALSO READ : GPS என்றால் என்ன? இது எவ்வாறு செயல்படுகிறது?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment