ஒளிரும் சருமம்.. அடர்த்தியான கூந்தலுக்கு வைட்டமின் ஈ- எப்படி பயன்படுத்துவது?
- Get link
- X
- Other Apps
உங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் ஈ’ பயன்படுத்துவதற்கான’ நீங்களே செய்யக்கூடிய சில குறிப்புகள் இதோ!
வைட்டமின் ஈ’ சருமத்தில் பயன்படுத்தப்படும் போது, அது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும், வறண்ட பகுதிகளை ஈரப்பதமாக்குகிறது, இயற்கையான தோல் தடையை சரிசெய்கிறது மற்றும் சுற்றுச்சூழலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
பிரபலங்கள் கூட தங்கள் தோல் பராமரிப்பு நடைமுறைகளில் இந்த வைட்டமினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். உங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பு வழக்கத்தில் வைட்டமின் ஈ’ பயன்படுத்துவதற்கான’ நீங்களே செய்யக்கூடிய சில குறிப்புகள் இதோ!
வறண்ட சருமத்துக்கான மாய்ஸ்சரைசிங் மாஸ்க்!
ஹெவி மேக்கப்-க்கு பிறகு, ஒரு இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் மாஸ்க் உங்களுக்குத் தேவை. வைட்டமின் ஈ மற்றும் கற்றாழையை ஒரு பேஸ்டாக கலந்து முகத்தில் தடவலாம். கற்றாழை’ சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் ஈ’ தோல் தடையை வலுப்படுத்துகிறது.
ஐ கிரீம்
வைட்டமின் ஈ’ நுண்ணிய கோடு மற்றும் சுருக்கங்களைத் தடுக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் கொலாஜன்-பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதால், கண் கிரீம்களுக்கு இது பிரபலமான கூடுதலாகும்.
எக்ஸ்ஃபாலியேட்டிங் பேஸ்ட்
வைட்டமின்கள் ஈ மற்றும் சி ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன. மசித்த பப்பாளி உடன்’ சில துளிகள் வைட்டமின் ஈ கலந்து’ அதை உங்கள் முகத்தில் மெதுவாக தடவவும். பழம்’ சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. வைட்டமின் ஈ சருமத்தின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
முடி வளர்ச்சிக்கு
வைட்டமின் ஈ முடி உதிர்தலுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இதில் ஆல்பா-டோகோபெரோல் (alpha-tocopherol) நிறைந்துள்ளது, இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் நன்கு கலந்து பயன்படுத்தவும், இது நுண்ணறைகளில் இருந்து ஃபாலிக்கிள்ஸ்-ஐ வலுப்படுத்துகிறது.
வறண்ட சருமத்துக்கு பாடி ஸ்க்ரப்
இதற்கு, சில துளிகள் வைட்டமின் ஈ மற்றும் சர்க்கரைத் துகள்களுடன் சிறிது ஆலிவ் எண்ணெயைக் கலக்கவும். வட்ட இயக்கத்தில் தோலில் நன்றாக மசாஜ் செய்யவும். வைட்டமின் ஈ நெகிழ்ச்சித்தன்மையை (elasticity) பராமரிக்க உதவுகிறது. சர்க்கரை ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜெண்டாக செயல்படுகிறது.
அடுத்தமுறை உங்கள் சரும மற்றும் முடி பராமரிப்புக்கு நீங்களே இந்த வைட்டமின் ஈ அழகு குறிப்புகளை பயன்படுத்தவும்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment