நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குறட்டையால் இரவு தூக்கம் பாதிக்கப்படுகிறதா? இதனை எப்படி சரி செய்யலாம்?

பொதுவாக குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், உடன் தூங்குபவர்களின் குறட்டையால் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள்.
தூங்கும் நேரத்தில் அருகில் ஒருவர் குறட்டை விட்டால் அது எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.  

குறட்டை விடுவதை பெரும்பாலும் ஒரு சாதாரண பிரச்னையாக நினைத்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அந்தவகையில் குறட்டை பிரச்சினையை போக்க சில இயற்கை வழிகள் என்ன என்பதை பார்ப்போம்.


பசும்பாலை குடிப்பதற்கு பதிலாக சோயா பாலுக்கு மாறுவது சிறந்தது. பால் பொருட்கள் சளியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. பசும்பாலில் இருக்கும் சில புரோட்டீன்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தூக்கம் சார்ந்த பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் இதனால் நாசிப் பாதையை மூடி, குறட்டையை அதிகரிக்கும்.

இஞ்சி மற்றும் தேன் இது உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, தொண்டையை மிருதுவாக்கி, குறட்டையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே தினமும் சிறிதளவு இஞ்சியும் தேனும் கலந்து சாப்பிட்டு வரலாம்.

 அன்னாசி, வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அதிக அளவு மெலடோனின் உள்ளது. இவற்றை சாப்பிட்டு வருவதால் உடலில் மெலடோனின் அளவு அதிகரிக்கும். மேலும் பூண்டு, வெங்காயம் மற்றும் குதிரைவாலி ஆகிய உணவுப் பொருட்களை உட்கொள்வது தொண்டை பகுதியில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.

இரவும் தூங்கும் முன் அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது குறட்டை பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். இது தொண்டையில் உள்ள அதிர்வுகளை குறைத்து குறட்டையை நிறுத்த உதவுகிறது.

ஆவி பிடித்தல் குறட்டையை குறைக்கும் சிறந்த வழியாகும். மேலும் சுத்தமான வெண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தாலும் நாசிப் பாதைகளைத் திறந்து குறட்டையைக் குறைக்க வழி செய்யும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்