2014 ஆம் ஆண்டு ப்ளாஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, காலை வெயிலின் சக்தியை பெற்ற உடல் பருமனான வயதானவர்கள் உடல் எடை குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வெயிலின் தேவையும் நமது உடலுக்கு முக்கியம். வெயிலில் தினமும் அமர்வதால் வைட்டமின் டி நேரடியாக நமக்கு கிடைக்கிறது. சிலர் நகர சூழலில் வாழும் பொழுது அதற்கான வாய்ப்புகள் கிடைப்பது குறைவாக இருக்கலாம் . ஆனால் 5 முதல் 15 நிமிடங்கள் வெயிலில் அமர்ந்து வெயிலை பார்ப்பது நல்லது. அப்படி செய்யும் பொழுது சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் கூலர்ஸ் அணிய தவறாதீர்கள் . பிரபலங்களான சோனாலி பிந்த்ரே , ஷில்பா ஷெட்டி ஆகியோர் வெயிலின் முக்கியத்துவம் குறித்த பதிவு ஒன்றை வெலியிட்டிருந்தனர்.
தூக்கம் :
தினமும் வெயிலிடம் இருந்து சக்தியை பெருவதால் தூக்கம் நன்றாக வரும் என்கிறது 2014 ஆம் ஆண்டு நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வு. அதில் இரவில் நன்றாக தூங்குவது மற்றும் காலையில் நேரத்திற்கு எழுந்துருப்பதற்கான சிக்னல்ஸ் உடலில் சிறப்பாக செல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
எடை இழப்பு :
2014 ஆம் ஆண்டு ப்ளாஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, காலை வெயிலின் சக்தியை பெற்ற உடல் பருமனான வயதானவர்கள் உடல் எடை குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒருவரின் எடை இழப்பு பயணத்தில் முக்கியமானது சிறந்த தூக்க சுழற்சிகள். கலோரிகளை எரிப்பதற்கும், சூரிய ஒளியைப் பெறுவதற்கும் சிறந்த வழிகளில் ஒன்று, காலையில் வெளியில் உங்கள் வொர்க்அவுட்டை மேற்கொள்வது அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது.
மனச்சோர்வு :
Seasonal affective disorder (SAD) என அழைக்கப்படும் பருவ கோளாறுகள் உணர்சியின் நலனை பாதிப்பதாக இருக்கும். ஆனால் வெயிலில் அமர்வதன் மூலமாக அதிலிருந்து கிடைக்கும் செரோடோனின் மனநிலையை அதிகரிப்பதோடு அது தொடர்புடைய ஹார்மோன், கவனம் செலுத்தவும், உற்சாகமாகவும் இருக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் தடுப்பு :
சன்ஸ்கிரீன் பாதுகாப்பு இல்லாமல் சூரிய ஒளியை அதிகமாக பெறுவது தோல் புற்றுநோய்க்கு பங்களிக்கும் என்றாலும், மிதமான அளவு சூரிய ஒளி புற்றுநோய் தடுப்பாகவும் செயல்படுகிறது.2008 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஸ்டடி ஆஃப் நெப்ராலஜியின் மருத்துவ இதழில் வைட்டமின் D மற்றும் சூரிய ஒளி: புற்றுநோய் தடுப்புக்கான உத்திகள் மற்றும் பிற உடல்நலப் பயன்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நாள் முழுவதும் அதிக சூரிய ஒளி உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய், ஹாட்ஜ்கின் லிம்போமா வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறது.
Comments
Post a Comment