நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பேய்யுடன் பேசிய விமான பணிப்பெண்.. கணவருக்காக காஃபி கேட்ட கொடூரம்.. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!

கொரோனா பரவல் காரணமாக பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை வீடியோக்களாக எடுத்து யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு போடப்பட்டது. இதையடுத்து பலரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், வெளியூர் பயணங்கள், வாழ்க்கை குறிப்புக்கள், சமையல் என தங்களுக்கு தெரிந்ததை வீடியோக்களாக எடுத்து யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்படி ஆரம்பித்த பலபேர் தற்போது பிரபலங்களாக மாறி சினிமாவிலும் நடித்து வருகின்றனர். 

அந்தவகையில், எமிரேட்ஸ் ஏர்லைன்சில் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த 38 வயதான சாண்ட்ரா க்வோன் என்ற பெண் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வீடியோக்களாக பதிவிட்டு வருகிறார். இந்தநிலையில், நேற்று முன் தினம் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1

சாண்ட்ரா க்வோன் ஒருமுறை விமானத்தில் பணியாற்றி கொண்டிருக்கும்போது, ஒரு பெண் பயணியிடம் சென்று உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது அந்த பயணி எனக்கு தற்போது எதுவும் குடிக்க வேண்டாம். 

பக்கத்தில் இருக்கும் என் கணவர் கடந்த ஒரு வாரமாக கடினமான சூழ்நிலையை சந்தித்துள்ளார்.மேலும், அதிகப்படியான உழைப்பிலும் ஈடுப்பட்டார். தற்போது, உடல் சோர்வால் நன்றாக உறங்கி கொண்டு இருக்கிறார். எனவே, அவர் எழுந்தவுடன் அவருக்கு கிரீன் டீ மட்டும் கொடுங்கள். அதிலும், டீயில் பாலும் சர்க்கரையும் சேர்ந்து இருந்தால்தான் ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். 


சாண்ட்ராவும் அந்த பெண்ணின் கணவர் எழுந்தவுடன் மனைவியின் கோரிக்கைபடி, உங்கள் மனைவி உங்களுக்கு கிரீன் டீ கொடுக்கச் சொன்னார் என்று அந்த கிரீன் டீயை கொடுக்க, மிரண்டுப்போன கணவர் அதிர்ச்சியாக இருக்கையை விட்டு எழுந்து என் மனைவி சொன்னாளா என்று கேட்டுள்ளார். 

ஒன்றும் புரியாத சாண்ட்ரா ஆம் என்று தலையாட்ட, என் மனைவி இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவளின் உடல் கூட சொந்த நாட்டிற்கு எடுத்து செல்ல இந்த விமானத்தில் சரக்குகள் வைக்கும் இடத்தில்தான் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதைகேட்டு சாண்ட்ராவுக்கு ஒரு கட்டத்தில் மயக்கமே வந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை தனது யூட்யூப் பக்கத்தில் சாண்ட்ரா பதிவிட, இதைபார்த்து அவரது பாலோவர்ஸ்கள் புல்லரித்து விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!