ஏப்ரலில் ஏலத்துக்கு வரும் உலகின் விலை உயர்ந்த அபூர்வ வைரம்..!
- Get link
- X
- Other Apps
உலகின் மிக உயர்ந்த வைரமாக கருதப்படும் நீல நிற வைரக் கல் வரும் ஏப்ரலில் ஏலத்திற்கு வருகிறது.
- விரைவில் ஏலத்துக்கு வரும் நீல நிற வைரம்
- உலகின் மிக விலை உயர்ந்த வைரம்
- ஏப்ரல் மாதம் ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு
வைரங்கள் என்றாலே விலை உயர்ந்தவை தான். ஆனால், அந்த வைரத்திலும் விலை உயர்ந்த வைரம் இருக்கிறது. நீல நிறத்தில் இருக்கும் வைரம் மிக மிக விலை உயர்ந்தவை. கார்பன் இறுகிய பிணைப்பின் காரணமாக உருவாகும் வைரங்கள் மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக கிடைக்கின்றன. அவற்றில் நீல நிறத்தில் இருக்கும் வைரங்கள் மிகவும் அபூர்வமாக கிடைப்பவை.
அந்த வகையில் தற்போது ஏலத்துக்கு வரும் நீல நிற வைர கல், தென் ஆப்பிரிக்காவின் கல்லினன் சுரங்கத்தில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீல வைரங்களிலேயே மிகப் பெரியது மற்றும் மிக விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது சோதஃபி என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இந்த வைரம் 15.10 கேரட் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள பிரபல ஏல நிறுவனமான ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த பிரம்மாண்ட ஏலம் நடைபெற இருக்கிறது.
இது சுமார் 359 கோடிக்கு ஏலம் போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 கேரட்டிற்குள் குறைவான வைரங்களே அதிகம் ஏலமிடப்பட்டுள்ளன. மிக அரிதாக 10 கேரட்டிற்கும் அதிமான வைரங்கள் ஏலமிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 15 கேரட்டிற்கு அதிமான வைரம் ஏலமிடப்பட்டதில்லை என வைர விற்பனை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வரும் ஏப்ரலில் ஏலத்திற்கு வரும் இந்த அபூர்வ வைரத்திற்கு கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏலத்திற்கு வந்த ஓப்பன்ஹைமர் ப்ளூ வைரம் தான் இதுவரை அதிக தொகைக்கு ஏலத்தில் விடப்பட்ட வைரமாகும். ஜெனீவாவின் கிறிஸ்ட்-ல் நடந்த இந்த ஏலத்தில் 57.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 4,29,43,53,000 ரூபாய்) இந்த வைரம் ஏலம் போனது. இத்தனைக்கும் ஓப்பன் ஹைமர் 14.6 கேரட் தான். முந்தை சாதனையை இந்த வைரக்கல் முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ALSO READ : அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment