கணினி விசைப்பலகையில் இருக்கும் Insert எனும் விசையின் பயன்பாடு என்ன?
- Get link
- X
- Other Apps
விசைப் பலகையின் வலது புறம் Insert எனும் ஒரு விசை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். சில கீபோர்டுகளில் இது INS எனப் பெயரிடப் பட்டிருக்கும். இதன் பயன்பாடு என்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை?
எம். எஸ். வர்டில் இந்த விசை எம்.எஸ்.வர்டைத் திறந்ததுமே Insert நிலையிலேயே இயல்பாக் (default) இருக்கும். Insert கீயை ஒரு முறை அழுத்தியதும் அது Overwrite நிலைக்கு மாறி விடும்.
அப்போது இடையில் எழுத்துக்களை டைப் செய்யும்போது முன்னர் டைப் செய்த எழுத்துக்களை அழித்து விடுவதைக் காணலாம்.
ஒரு வேளை Insert விசையை அழுத்தியும்கூட Overwrite நிலைக்கு மாறாமலிருந்தால், File – Options – Advanced ஊடாக Editing options பகுதிக்குச் சென்று Use the Insert key to control overtype mode என்பதை தெரிவு நிலைக்கு மாற்ற வேண்டும்.
எம்.எஸ்.வர்ட் தற்போது Insert நிலையிலா அல்லது Overtype இலா இருக்கிறது என்பதை Status Bar இல் காண்பிக்கும்.
ஸ்டேட்டஸ் (Status Bar) பாரில் Overtype என இருப்பின் அது Overtype நிலையில் இருப்பதாகக் கொள்ளுங்கள்.
மேலும் Insert கீயை அழுத்தியதும் ஸ்டேட்டஸ் பாரில் Insert / Overtype எனக் காண்பிக்காமலிருந்தால் ஸ்டேட்டஸ் பாரின்மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Overtype என்பதைத் தெரிவு செய்ய வேண்டும்.
Insert கீயை எம்.எஸ்.வர்டில் காப்பி செய்தை பேஸ்ட் (Paste) செய்வதற்கான ஒரு குறுக்கு வழி விசையாகவும் பயன்படுத்தலாம் என்பது மற்றுமொரு பயன்பாடு...
ALSO READ : நெருப்பு ஏன் எப்போதும் மேல் நோக்கியே எரிகின்றது?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment