தினமும் ஏதாவது ஒரு காய்கறியை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
காய்கறிகளில் உள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்தச் சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும், புத்துணர்வையும் தரக்கூடியது.
வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி, சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
பாகற்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
முருங்கைக்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், ரத்த சோகையை சரிப்படுத்தும்.
வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியை தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும்.
கோவைக்காய்:
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றை நீக்கும்.
சுண்டைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியை தூண்டும்.
சுரைக்காய்:
இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
குடை மிளகாய்:
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
அவரைக்காய்:
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
கேரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
Comments
Post a Comment