நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜப்பான் நாட்டில் வசிக்கும் மக்கள் என்றும் இளமையுடன் 100 வயது வரை வாழ இது தான் காரணமா?

 உலகில் உள்ள அனைத்து நாடுகளை காட்டிலும் ஜப்பானில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் உடலை இளமையாக வைத்திருக்க அவர்கள் பயன்படுத்தும் சில ரகசியங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..



  • முதலில் சாப்பிடும் போது ஒரு பெரிய தட்டுக்கு பதிலாக சிறிய தட்டுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகமாகச் சாப்பிடாமல் இருக்கவும் இதன் விளைவாக ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் இது உதவுகிறது.
  • நீங்கள் 80 சதவிகிதம் நிரம்பும் வரை அல்லது உங்கள் உணவின் 10 பங்குகளில் 8 மட்டுமே சாப்பிடுங்கள். அதற்கு மீதமுள்ள உணவை தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. அதனை சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம்.

  • நாகானோ குடியிருப்பாளர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 15.1 கிராம் உப்பை உட்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த அளவு ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம் என்பதால் அதற்கு பதிலாக உப்பு 0.9 கிராம் மற்றும் சமையல் எண்ணெய் ஒரு தேக்கரண்டி பயன்படுத்தப்படுகின்றது.
  • ஜப்பானியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பி அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர். அதில் ஒன்று நடைபயிற்சி ஆகும்.

  • நீராவி குளியல் ஓய்வெடுப்பதற்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இதன்போது நீங்கள் தோலுக்கு உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதனை நீண்ட நேரம் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.  




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!