நியூயார்க்: படிக்கட்டுக்கு அடியில் ரகசிய அறை! 2 ஆண்டுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை!
- Get link
- X
- Other Apps
அமெரிக்காவில் காணாமல்போய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ப்புரிமை விட்டுப் போன சொந்த தாய் வீட்டின் படிக்கெட்டு அடியிலேயே குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் வளர்ப்புரிமை கைவிட்டுப்போன பைச்லேயின் பெற்ற தாய் கிம்பர்ளி கூபர்(33) மற்றும் தந்தை கிர்க் ஷுல்டிஸ்(32) ஆகியோர்மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போலீசாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. பைஸ்லேயின் பெற்றோர் வீட்டிற்கு போலீசார் பலமுறை விசாரணைக்கு சென்றபோதும் பைஸ்லேயின் தாத்தா குழந்தையைப் பற்றி தங்களுக்கு எந்த விவரமும் தெரியவில்லை என மறுத்து போலீசாரை சமாளித்து அனுப்பியிருக்கிறார்.
இப்படி இரண்டு ஆண்டுகள் கடந்து சிறுமிக்கு 6 வயதும் ஆகிவிட்டது. ஆனால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த திங்கட்கிழமை குழந்தை கிர்க்கின் வீட்டில்தான் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அங்கு சென்ற அலசி ஆராய்ந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணிநேர சோதனைக்குப்பிறகு படிக்கெட்டுக்கு அடியிலுள்ள ஒரு சிறிய அறையில் 6 வயது சிறுமியும், அவளுடைய தாயும் ஈரமான உறையின் உள்ளே மறைந்திருந்தது கண்டுபிடித்தனர்.
வளர்ப்புரிமை பறிக்கப்பட்டதால் குழந்தையை கடத்திய குற்றத்திற்காக சிறுமியின் சொந்த பெற்றோர் மற்றும் உடந்தையாக இருந்த தாத்தா, பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆராக்கியமாக இருப்பதாகவும், தற்போது வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் விவாகரத்து பெற்ற பெற்றோர் தங்களது குழந்தையுடன் வாழும் உரிமையை சில நேரங்களில் இழந்துவிடுகின்றனர். அந்த குழந்தைகள் தனித்தே வளருகின்றன. அல்லது யாரேனும் ஒரு தரப்பிடம் வளருகின்றன. தங்களது குழந்தை தன்னிடம் வளராமல் இருந்தால் அவர்களை வளர்ப்பு உரிமையற்ற பெற்றோர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வேறொரு தரப்பிடம் வளர்ந்து வந்த ஒரு குழந்தையை தான் அவளுடைய விவாகரத்து பெற்றிருந்த ஒரு தாய் தன்னுடனே குழந்தையை வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு வகையான பாசப்போராட்டம் இருக்கிறது என்று இணையத்தில் பலரும் கூறி வருகின்றனர்.
ALSO READ : மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment