வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுபவர்களுக்காக வந்த செம்ம அப்டேட்
- Get link
- X
- Other Apps
உலகம் முழுவதும் வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள எளிமையான அம்சங்கள் வாட்ஸ்அப்பை அனைவரும் விரும்பும் வகையில் மாற்றியுள்ளது.
அதிக தரம் கொண்ட புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றால் அவற்றை டாக்குமெண்டாக அனுப்ப வேண்டும். அப்படி டாக்குமெண்டாக அனுப்பும்போது அவற்றில் பெயர் மட்டுமே காட்டப்படும்.
அதை டவுன்லோட் செய்தால் மட்டுமே அது என்ன புகைப்படம் என நமக்கு தெரிய வரும். இந்நிலையில், இதை தவிர்ப்பதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் புதிய “ப்ரிவீவ்” என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் நாம் டாகுமெண்ட்டை அனுப்பும்போது அதன் குறைந்த தரத்திலான பிரிவீவ் படத்தையும் அனுப்பலாம். இதன் மூலம் அந்த டாக்குமெண்ட் எதை பற்றியது என்பதை தெரிந்துகொள்ளமுடியும்.
மேலும், இந்த அம்சத்தை புகைப்படங்கள் மட்டுமின்றி அனைத்து டாக்குமெண்டுகளுக்கும் பயன்படுத்தலாம். மேலும் வாட்ஸ்அப்பில் லிங்க்கை பகிரும்போதும் இந்த “ப்ரிவீவ்” அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ : மாணவர்களே வெற்றி உங்கள் கையில்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment