நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

GPS என்றால் என்ன? இது எவ்வாறு செயல்படுகிறது?

 பூமியில் நாம் எங்கு இருக்கின்றோம் என்பதனை அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற தொழில்நுட்பம் . இந்த ஜிபிஎஸ்(GPS) வசதியினை கொண்டுதான் நாம் கூகுளின் மேப் உள்ளிட்டவற்றினை பயன்படுத்துகின்றோம் .


இதற்கு Global Positioning System என்று விரிவாக்கம். இது ஒரு அமெரிக்காவை சேர்ந்த முறை. இது 28 செயற்கை கோள்கள் மூலம் செயல்படுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற Google Map , OLA , UBER , Security Devices, Driverless car ஆகியவை அனைத்துமே ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே செயல்படுகிறது.

GPS தொழில்நுட்பம் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டது . ராணுவ தாக்குதல்களை துல்லியமாக மேற்கொள்ளவும் ராணுவ தளவாடங்கள் எங்கிருக்கின்றன என்பதனை அறிந்துகொள்ளவும் GPS போன்றதொரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது , உருவாக்கவும்பட்டது .  

ஜிபிஎஸ் எவ்வாறு செயல்படுகிறது?

ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளைக்கு இரண்டு முறை துல்லியமான சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன.

ஒவ்வொரு செயற்கைக்கோளும் ஒரு தனித்துவமான சமிக்ஞை மற்றும் சுற்றுப்பாதை அளவுருக்களை அனுப்புகிறது, இது ஜிபிஎஸ் சாதனங்களை டிகோட் செய்து செயற்கைக்கோளின் துல்லியமான இருப்பிடத்தை கணக்கிட அனுமதிக்கிறது.

பயனரின் சரியான இருப்பிடத்தைக் கணக்கிட ஜிபிஎஸ் பெறுநர்கள் இந்தத் தகவலைப் பயன்படுத்துகின்றனர்.  



ALSO READ : வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுபவர்களுக்காக வந்த செம்ம அப்டேட்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்