நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சங்கடத்தை ஏற்படுத்தும் அக்குள் கருமை.. தோல் மருத்துவர் சொல்லும் தீர்வு இதோ!

 கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


பிக்மென்டேஷன் ஒரு பொதுவான தோல் பிரச்சனை ஆனால் அதற்கு தீர்வுகளும் உள்ளன. இது தோலில் எங்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நிறமாற்றம் மக்களை எரிச்சலடையச் செய்து அவர்களுக்கு லேசான சங்கடத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, இது அக்குளில் இருந்தால், சில ஆடைகளை அணிவதைத் தடுக்கலாம்.

“கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தோல் மருத்துவர் சு இன்ஸ்டாகிராமில் கூறினார்.

சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும்.

சுவாரஸ்யமாக, முடி அகற்றும் நுட்பங்களான “ஷேவிங், பிளக்கிங் மற்றும் வாக்சிங்” போன்றவை நமது உடலால் “காயங்களாக” பார்க்கப்படலாம், இதனால் குறிப்பிட்ட பகுதியில் அதிகப்படியான மெலனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இவை தவிர, எக்ஸ்ஃபாலியேஷன் செய்யாதது, உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக பிக்மென்டேஷன் ஏற்படலாம்.  

மற்ற காரணிகளில் இன்சுலின் எதிர்ப்பு, மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் ஷேவிங் செய்த பிறகு தோலில் எஞ்சியிருக்கும் பிக்மென்ட் ஆகியவை அடங்கும்.

தோல் மருத்துவரின் கூற்றுப்படி, அக்குள் பிக்மென்டேஷனை தடுக்க, பின்வருவனவற்றைச் செய்யலாம்:

1. வாசனை இல்லாத டியோடரண்டின் பிராண்டுக்கு மாறவும்

2. ரேசர்கள் எரிச்சலை ஏற்படுத்தும், எனவே நீங்கள் ஷேவ் செய்யும் போது, ​​அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

3. சன்ஸ்கிரீன், இந்த அதிசய தயாரிப்பு அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

4. தளர்வான ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகள் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.

5. சுறுசுறுப்பாக இருங்கள்; உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு ஆகியவை அக்குள் பிக்மென்டேஷனை குறைக்க உதவும்.



ALSO READ : செலவில்லாமல் சருமத்தை பராமரிக்கும் வழிகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!