நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இரவில் தண்ணீர் குடிக்கலாமா? கூடாதா?

பொதுவாக நம்மில் பலருக்கு இரவில் தண்ணீர் குடிக்கலாமா? வேண்டாமா என்ற சந்தேகம் காணப்படுவதுண்டு. 
உண்மையில் இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது.

இது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் தண்ணீரால் உடலில் உறிஞ்சப்படுகின்றன.

தண்ணீர் குடிப்பதன் மூலம், வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.  

இரவில் தண்ணீர் குடிக்கலாமா கூடாதா?

 இரவில் உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால், உடல் இயற்கையான முறையில் சுத்தப்படுத்தப்படும். இது நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்திற்கு உதவுகிறது. 

  அசிடிட்டி அல்லது கேஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். சளி இருமல் உள்ளவர்களுக்கு லேசான வெதுவெதுப்பான நீர் ஒரு சஞ்சீவியாக உதவும்.   

 சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் எலுமிச்சை, கிரீன் டீ, மூலிகை தேநீர் மற்றும் பிற ஆரோக்கியமான பானங்களை குடிக்கலாம். 

  சாதாரண தண்ணீரை அதிகம் குடித்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரலாம். இதனால் தூக்கம் வராமல் போகலாம். இரவில் ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் மட்டும் குடிப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.   

 குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பகலில் அதிக தண்ணீர் குடிப்பதும், இரவில் தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பதும் நல்லது.

 தூங்கும் போது அதிக தண்ணீர் குடித்தால், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   

  யார் எல்லாம் தவிர்க்க வேண்டும்?

 நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 இவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.  






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்