நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இருமலை விட சும்மா வளவளவென்று பேசுவதால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்.

சும்மா வளவளவென்று பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாம்.
லண்டன்

30 விநாடிகள், மாஸ்க் அணியாமல், சரியான காற்றோட்டமில்லாத அறை ஒன்றில் ஒருவர் பேசிக்கொண்டிருப்பது, ஒருவர் முன் அரை விநாடி இருமுவதைவிட அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி இணைந்து  ஆய்வு ஒன்றை நடத்தின. இந்த ஆய்வு குறித்து ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் பெட்ரோ  டி ஒலிவேரா கூறியதாவது:-

 

இருமல் வேகமாக பெரிய எச்சில் துளிகளை உருவாக்கும் என்றால், பேசுவது அதிக அளவு சிறிய எச்சில் துளிகளை உருவாக்கும். அதுவும், அந்த துகள்கள் காற்றில் ஒரு மணி நேரம் வரை சுற்றிக்கொண்டிருக்கும். 

உதாரணமாக, மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பறை ஒன்றில் ஒரு ஆசிரியர் பாடம் எடுப்பதைக் கூறலாம். இருமுவதால் கொரோனா பரவும் என்பதை அறிந்துள்ள மக்கள், பாதுகாப்பாக கைக்குட்டை ஒன்றால் வாயை மூடி இருமுகிறார்கள்.ஆனால், பேசும்போது அப்படி செய்யமுடியாது அல்லவா, ஆகவே, மாஸ்க் அணிந்துகொள்வது அந்த பிரச்சினையை தடுத்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் என கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்