நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட வேண்டாம் - உலக நலவாழ்வு நிறுவனம்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட வேண்டாம் என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக நலவாழ்வு நிறுவன உதவி இயக்குநர் மரி ஏஞ்சலா சிமாவோ, அனைத்து நாடுகளிலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யப் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி போட யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உலகின் 50 நாடுகளில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ளதாகவும், அவற்றில் நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகள் உயர்வருமானமுள்ள நாடுகள் என்றும் குறிப்பிட்டார். 


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!