நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடல் ஆரோக்கியம் மட்டுமே நிரந்தரம்: உணர்த்திய கொரோனாவுக்கு நன்றி!

 

கொரோனா!அவ்வளவு சீக்கிரம் இந்த இந்த வார்த்தையை, உலக மக்களால் மறக்க முடியாது. 2020ம் ஆண்டை பெரும் நம்பிக்கையோடு எதிர்கொண்ட நம்மை, வீட்டோடு முடக்கிப்போட்டு விட்டது ஒற்றை வைரஸ்!

மார்ச், 22ம் தேதி 14 மணி நேர சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, கொரோனாவால் ஏற்பட போகும் பேராபத்தை பற்றி நமக்கு தெரியாது. ஆனால் மீண்டும் சில தினங்களில், மார்ச் 24ல், 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை, பிரதமர் அறிவித்த போது, இதுவரை நாம் காணாத, உணராத அச்சம் நம்மை சூழ்ந்து கொண்டது.வசதி இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் அடுத்த வேளை உணவை பற்றி சிந்தித்தது கொரோனா ஊரடங்கு காலத்தில்தான். நாம் ஒவ்வொருவரும் கடந்து வந்த, அந்த இருண்ட நாட்களை இதோ மீண்டும் திரும்பிப்பார்ப்போம். இனி இந்த நிலைமை எப்போதும், நம் வாழ்வில் குறுக்கிடாதவாறு, தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம்.



ஆஸ்பத்திரிக்கு வராதீங்க!


ஒரு நோயை பார்த்து மருத்துவர்களே அச்சப்பட்ட அதிசயம், கொரோனா காலத்தில்தான் நடந்தது. மருத்துவ சுற்றுலா மையமாக விளங்கிய கோவையில், அரசு மருத்துவ மனையை தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்குஅனுமதி மறுக்கப்பட்டது. எந்த மருத்துவரும் நோயாளியை பார்க்க விரும்பவில்லை.


அரசு மருத்துவமனைக்கு சபாஷ்!


அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களுக்கு பெரிய சல்யூட் அடிக்க வேண்டும். நோய் என்று வந்த அனைவரையும், தங்கள் உயிரையும் துச்சமென கருதி, தைரியமாக சிகிச்சை அளித்தனர். சிலர் தொற்றுக்கு ஆளாகினர். பி.பி.இ.,உடையில் ஆறு மணி நேரம் வரை உணவு, தண்ணீர், அருந்தாமல், இயற்கை உபாதைகளை அடக்கியபடி சிகிச்சை அளிக்கும் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது.

டாக்டர்களுக்கு இணையாக, களத்தில் இறங்கி துாய்மை பணி மேற்கொண்டனர்துாய்மை பணியாளர்கள். நோய் பாதித்த வீடுகள், மருத்துவமனைகளில், கிருமி நாசினி தெளித்து, தொற்று பரவாமல் மக்களை காத்தனர். இதனால், துாய்மை பணியாளர்களை துச்சமாக கருதியவர்கள், அவர்களுக்கு மாலை மரியாதை செய்தனர். சிலர் கால்களை கழுவி விட்டனர்.


பட்டினி கிடந்த வெளியூர்வாசிகள்


ஊரடங்கு வரும் என்று தெரியாமல், கோவைக்கு வந்து மாட்டிக்கொண்ட பயணிகள், பிற மாநில தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும், உணவு தண்ணீர் கூட கிடைக்காமலும் படாதபாடு பட்டனர்.


தன்னார்வலர்களின் மனித நேயம்


எந்த நிலை வந்தாலும், மனிதநேயம் மட்டும் மரித்துப்போகாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, கோவையின் தன்னார்வலர்கள், மக்களுக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கி பட்டினியில் இருந்து காப்பாற்றினர். தெரு நாய்களுக்கும் உணவு வழங்கினர். அதன் பிறகே அரசு விழித்துக்கொண்டு, அம்மா உணவகம் வாயிலாக உணவு வழங்கியது.கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை, உறவினர்களே நெருங்க முடியாதபோது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தன்னார்வலர்கள் பலர் பெற்று, பாதுகாப்பாக அடக்கம் செய்தனர். அவர்களுக்கு பெரிய சல்யூட்!


திறந்தே இருந்த மருந்துகடைகள்


அனைத்து கடைகளும் அடைத்துக்கிடந்தாலும், மருந்துகடைகள் மட்டும் இரவு பகலாக திறந்து இருந்தன. மருந்துக்கடை ஊழியர்கள் பணிச்சோர்வை காட்டிக்கொள்ளாமல், நேரம் காலம் பார்க்காமல் பணியில் இருந்தனர். டாக்டர்கள் இல்லாமலே, சிறு உபாதைகளுக்கு மக்கள் மருந்து வாங்கிச்சென்றனர். மாஸ்க், சானிடைசர்கள் விற்பனை சக்கைப்போடு போட்டது.

காப்பாற்றிய பாரம்பரிய மருத்துவம்


கொரோனாவுக்கு மருந்து இல்லை என, உலக சுகாதார மையம் அறிவித்த போது, நம்ம ஊர் சித்தா, ஓமியோபதி மற்றும், ஆயுர்வேத மருத்துவர்கள், தங்கள் மருந்துகளால் மக்களுக்கு நம்பிக்கை அளித்தனர். ஓமியோபதி டாக்டர்கள் வீதி, வீதியாக அலைந்து நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வினியோகித்தனர். இப்போது வரை, நம்மை காப்பாற்றி வருவதும் நம் பாரம்பரிய மருந்துகள்தான் என்றால் அது மிகையில்லை.



பாட்டி வைத்தியம்


இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, பூண்டு, மிளகு, மஞ்சள் என, நம் பாட்டிமார் வைத்தியத்தில் மக்கள் இறங்கினர். நோய் எதிர்ப்பு தரும் பழங்கள் காய்கறிகளை தேடிப்பிடித்து வாங்கி வந்து சாப்பிட்டனர். மஞ்சள் பொடி கலந்த ஆவி பிடித்தால், கொரோனா அண்டாது என்று சொன்னதால், ஆவி பிடித்து கொரோனாவை விரட்ட முற்பட்டனர்.


மளிகை கடைகள் பிசியோ பிசி


ஊரடங்கு காலத்தில் காய்கறி மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டதால், மளிகைக்கடைகளில் அனைத்தும் கிடைத்தன. சமூக இடைவெளி கடைபிடிக்க கடைகளின் முன் கட்டம், வட்டம் வரையப்பட்டது. மாலை ஐந்து மணிக்குள் கடைகள் அடைத்து விடுவார்கள் என்பதால், சமூக இடைவெளியை மறந்து, முட்டி மோதி பொருட்களை வாங்கி சென்றனர்.


வீடு தேடி வந்த காய்கறி



காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால், காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டது. அரசு காய்கறி வண்டிகளில் காய்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது. வேலை இல்லாத பட்டதாரிகள், ஆசிரியர்கள் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினர்.


'டிவி'யில் மூழ்கிய குழந்தைகள்


குழந்தைகளை 'டிவி பார்க்காதே புத்தகத்தை எடுத்துப்படி' என்று சொல்லி வந்த பெற்றோர், 'வெளியே போகாம டிவி பாரு' என்று வலியுறுத்தினர். 'மொபைல் போனை தொடாதே' என, குழந்தைகளிடம் சொன்ன பெற்றோர், புதிய மொபைல் வாங்கி கொடுத்து ஆன்லைனில் பாடம் படிக்க சொல்கின்றனர். இதனால் பல குழந்தைகளின் உடல் பருமனானது.


தொற்று தாக்கிய கலெக்டர்


அடிப்படை அரசு பணியாளர்கள் முதல் ஆட்சி பணியாளர் வரை, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக களத்தில் இருந்தனர். அதனால் கலெக்டர் ராஜாமணி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். நோயில் இருந்து மீண்டு வந்து, இப்போது மீண்டும் கொரோனா தடுப்பு பணியை தொடர்கிறார்.கார்பன் புகை இல்லாத காற்றுவாகனங்கள் செல்லாதநெடுஞ்சாலைகள், வெறிச்சோடி இருந்தது. ஒலி மாசு இல்லை, காற்று மாசு இல்லை. கார்பன் புகை கலக்காத ஆக்சிஜன் காற்றை, கொஞ்ச காலம் கோவை மக்களால் சுவாசிக்க முடிந்தது.



இது வளர்ச்சிக்கான ஆண்டு


கொரோனா என்ற பெருந்தொற்று நோய், நமக்கு பெரிய பாடத்தை நடத்தி இருக்கிறது. ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் எல்லோருக்கும் இருப்பது, ஓர் உயிர்தான். பணம், பொருள், சொத்து இருந்தால் மட்டும் மனிதர்களால் சொகுசாக வாழ முடியாது. ஆரோக்கிய வாழ்வே நிரந்தரம் என்பதை, கொரோனா அறிவுறுத்தியுள்ளது.அனைவரும் சேர்ந்து நோய்த்தொற்று நடவடிக்கைகளை பின்பற்றியதால், இப்போது மெல்ல மீண்டு வருகிறோம். இந்த புத்தாண்டு, நோய்த்தொற்றுகள் இல்லாத புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பதுதான், நம் ஒவ்வொருவரின் ஆசையும் கனவும். மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பால் கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்றினால், நம் நாட்டின் வளர்ச்சிக்கான ஆண்டாக, இந்த புத்தாண்டு இருக்கும் என்பதில்சந்தேகமில்லை!


மாஸ்க் அணிவது தொடரணும்!


கோவையை பொறுத்தவரை கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மக்களிடம் கொரோனா குறித்த பயம் போய் விட்டது. அதனால் பலர் மாஸ்க் அணியாமல் செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பலர், மாஸ்க் அணிவதில்லை.இது தவறு. கொரோனாவை பொறுத்தவரை மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியுடன் இருப்பது முக்கியம்.மாஸ்க் கொரோனாவை மட்டுமல்ல, பல நோய்கள் வராமல் தடுக்கிறது. அதனால் நாம் மாஸ்க் அணிவதை இந்த புத்தாண்டிலும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.


டாக்டர் நிர்மலா,
டீன்
இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை


இரண்டாவது அலை வராது!


தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா பரவல் நன்றாக குறைந்துள்ளது. 2021ம் ஆண்டு, கண்டிப்பாக கொரோனா இல்லாத ஆண்டாக இருக்கும். கொரோனா குறைந்து விட்டதுஎன்பதற்காக நாம் அஜாக்கிரதையாக இருக்க கூடாது. இன்னும் ஆறு மாதங்களுக்கு மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கல்யாணம், பிறந்தநாள் மற்றும் கோவில் விசேஷங்களில் பங்கேற்கும் போது, கவனமாக இருக்க வேண்டும். கொரோனா இரண்டாவது அலை எல்லாம் இங்கு வராது. இருந்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.


டாக்டர் காளிதாஸ்,
டீன்
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை




ALSO READ :  Siberia-வின் கொடூரக் குளிரில் உறைந்துபோன noodles, viral ஆன post!!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!