Siberia-வின் கொடூரக் குளிரில் உறைந்துபோன noodles, viral ஆன post!!
- Get link
- X
- Other Apps
வட இந்தியாவில் வழக்கம் போல் குளிர் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. உலகின் பல நாடுகளில் குளிர் மிக அதிகமாக உள்ளது. மக்கள் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் தங்களை சூடாக வைத்துக்கொள்ள பலவித முயற்சிகளை மெற்கொண்டு வருகிறார்கள்.
ரஷ்யாவின் (Russia) சைபீரியாவில் பல இடங்களில் வெப்பநிலை இப்போது -45 செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இது நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு குளிராகும்.
ஒவ்வொரு ஆண்டும், சைபீரியா (Siberia) பிராந்தியத்தில் மக்கள் அனுபவிக்கும் கடுமையான குளிர் உலக அளவில் தலைப்புச் செய்தியாகிறது. இந்த ஆண்டும் அது மாறவில்லை.
எலும்பை குத்தும் குளிரின் (Cold) அட்டூழியத்தை சித்தரிக்கும் ஒரு படத்தை சைபீரிய நபர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அது மக்களை திகைக்க வைத்துள்ளது. ஒரு ட்விட்டர் பயனர், தனது நூடுல்ஸ் மற்றும் முட்டைகள் -45 செல்ஷியசில் காற்றில் உறைந்திருப்பதை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். சைபீரியாவில் உள்ள தனது சொந்த ஊரான நோவோடிபிர்ஸ்கில் அவர் இதை எடுத்துள்ளார்.
காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த படத்தை பகிர்ந்த ட்விட்டர் பயனர், @olegsvn, “இன்று எனது சொந்த ஊரான சைபீரியாவின் நோவோடிபிர்ஸ்கில் -45 செல்ஷியஸ் (-49 எஃப்)" என்று எழுதினார்.
இந்த படம் சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிவிட்டது. இதைக் கண்டு பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், பலர் இதற்கு வேடிக்கையான பின்னூட்டங்களை அளித்து வருகின்றனர். இந்த படத்தை பகிர்ந்த ஒலெக்கால் தனது உணவை சாப்பிட முடியுமா இல்லையா என்பது பலரது கேள்வியாக இருந்தது.
மேற்கு மற்றும் மத்திய சைபீரியாவில் ஆண்டு இறுதிக்குள் -50 செல்சியஸ் வரை வெப்பநிலை குறையக்கூடும் என்று ரஷ்யாவின் நீர்நிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வழக்கமான டிசம்பர் குளிரை விட 20 டிகிரி குறைவாக இருக்கும்.
ஹைட்ரோமீட்டாலஜிகல் சென்டரின் விஞ்ஞான இயக்குனர் ரோமன் வில்ஃபாண்டின் கூற்றுப்படி, தீவிர குளிர் என்பது காலநிலை மாற்றத்தின் விளைவாகும். "புவி வெப்பமடைதல் என்பது அதிக வெப்பநிலை மட்டுமல்ல, இதில் குளிர் அதிகரிப்பதும் இருக்கும். மாறுபாட்டின் அளவீடுகள் பெரிய வீச்சில் இருக்கும்” என்று அவர் கூறினார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment