நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கால் ஒடிந்த தனது எஜமானரைப் பார்த்து நொண்டிச் நொண்டிச் செல்லும் வளர்ப்பு நாய் !

இங்கிலாந்தில் கால் ஒடிந்த தனது எஜமானரைப் பார்த்து வளர்ப்பு நாயும் நொண்டிச் நொண்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தலைநகர் லண்டனில் வசிப்பவர் ரஸல் ஜோன்ஸ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக எக்ஸ்ரே எடுப்பதற்காக அவர் செல்லும் போது, ரஸல்சின் வளர்ப்பு நாயும் அவரைப் போலவே ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நொண்டியடித்தபடி சென்றது.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!