நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காதல் மலர்ந்தது 1950-ல், கல்யாணம் ஆனது 2020-ல்: இது ஒரு அழகிய அதிசய காதல் கதை!!

 பால் மற்றும் ஹெர்வி மீண்டும் ஒரு ரீயூனியனுக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இருவருக்கும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது. அதன் பிறகு இருவரும் பேசத் தொடங்கினர்.


காதலுக்கு கண்ணில்லை, வயதில்லை, ஜாதி மத பேதமில்லை, காதல் பணம் பார்ப்பதில்லை, காதல் வசதி பார்ப்பதில்லை என நாம் இப்படி பல வசனங்களை திரைப்படங்களில் கேட்டிருக்கிறோம். உண்மையான அன்பு மட்டுமே காதல் என காலம் காலமாக நாம் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் கேட்டு வருகிறோம். ஆனால், இப்படிப்பட்ட வசனங்கள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் சரியாக பொருந்தி விடுகின்றன.

ஆம்!! வியக்க வைக்கும் ஒரு காதல் கதை கனடாவிலிருந்து (Canada) வெளிவந்துள்ளது. இங்கு இரண்டு இதயங்களில் இருந்த காதல் நிறைவேற 70 ஆண்டுகள் ஆனது. ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்.

ஃபிரடெரிக் பால் மற்றும் புளோரன்ஸ் ஹார்வியின் காவியக் காதல்

ஆம்! இந்த கனேடிய தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள 70 ஆண்டுகள் ஆனது. இந்த காதல் கதை (Love Story) இருவரும் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது 1950 இல் தொடங்கியது. பால் மற்றும் ஹார்வரி இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருப்பினும், இந்த காதலில், ஐந்து ஆண்டுகளிலேயே ஒரு இடைவெளி வந்தது.

பால் திரும்பினார், ஹார்வியைக் காணவில்லை

சிபிசியில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, 1995 இல் பால் வேலைக்காக டோரெண்டோவுக்குச் சென்றார். அங்கு, அவர் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் அங்கு அவருக்கு கொஞ்சம் பண பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நேரத்தில், பாலுக்கு அவரது நண்பர் மற்றொரு வேலையை வழங்கினார். சிறிது பணம் சேர்த்துவிட்டு அவர் திரும்பி வந்தபோது, ஹார்வி சொந்த ஊரை விட்டு வெளியேறியிருந்தார்.

கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்டனர்

சில காலம் கழித்து இருவரும் வெவ்வேறு நபர்களை மணந்தனர். பால் தனது மனைவியை 84 வயதிலும், ஹார்வி தனது கணவரை 81 வயதிலும் இழந்தனர். 65 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரு ரீயூனியனுக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இருவருக்கும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது.

அதன் பிறகு இருவரும் பேசத் தொடங்கினர். அவரவர் வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். பல மாதங்கள் தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, இருவரும் ஆகஸ்ட் 8, 2020 அன்று, கொரொனாவுக்கு (Corona) மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தைப் பற்றி கூறுகையில், பால், “அவள் ஒரு தேவதை, எனக்காக சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதை” என்று கூறினார்.


ALSO READ :  மொய் நோட்டு எதற்கு.. கூகுள் பே இருக்கு..! வைரலாகும் புதுமண தம்பதியரின் புது ஐடியா.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்