நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிகிச்சைக்கு சென்ற உரிமையாளர்... வழிமேல் விழிவைத்து காத்திருந்த நாய்.!

துருக்கியில், 6 நாட்கள் மருத்துவமனை வாசலில் உரிமையாளருக்காக நாய் ஒன்று காத்திருந்தது செய்தி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மனிதர்களின் மிக சிறந்த நண்பன் நாய் என்று கூறுவார்கள். விசுவாசத்திலும், பாசத்திலும் நாய்களை போல் ஒரு ஜீவராசியை இந்த உலகத்தில் நாம் பார்த்திருக்க முடியாது. அதனை நிரூபிக்கும் வகையில், மனதை நெகிழவைக்கும் சம்பவம் துருக்கியில் அரங்கேறியுள்ளது.

வட துருக்கியின், டிராப்ஸன் 
((Trabzon )) நகரில் ((North Turkey)) செமல் சென்டுர்க்((Cemal Senturk )) என்ற முதியவர் வசித்து வருகிறார். நாய்கள் மேல் அதிக பிரியம் உள்ள அவர் கடந்த 9 வருடங்களாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். திடீரென செமல் சென்டுர்க் ((Cemal Senturk )) மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிராப்ஸனில் ((Trabzon )) நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஜனவரி 14ஆம் தேதி செமல் சென்டுர்க் ((Cemal Senturk )) கொண்டுசெல்லப்பட்டார். தனது உரிமையாளர் ஆம்புலன்ஸில் செல்வதை கண்ட அவரது நாய் பான்சுக் ((Boncuk )), ஆம்புலன்சை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

பின்னர், செமல் சென்டுர்க்((Cemal Senturk )) சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிமையாளரை பிரிந்து தவித்த நாய், தினமும் மருத்துவமனை வாசலில் சென்று நின்றுள்ளது. செமல் சென்டுற்கின் ((Cemal Senturk )) மகள், நாயை வீட்டுக்கு அழைத்து சென்றபோதும், மறுநாள் காலையில், பான்சுக்((Boncuk )) மருத்துமனைக்கு திரும்ப ஓடிவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!