நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை.

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு நிரந்தமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட சீன செயலிகள் இதில் அடங்கும்.

ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்