நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குறைந்த விலையில் ‛கோவிஷீல்ட் தடுப்பூசியை விற்க முடிவு

புதுடில்லி: 

கொரோனா வைரசுக்கான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை, குறைந்த விலையில் விற்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், 'ஆஸ்ட்ராஜெனெகா' நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள, கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை, நம் நாட்டில் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
இந்த தடுப்பூசியை உடனடியாக பயன்படுத்த, மத்திய அரசு, நேற்று அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தது. அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால், அடுத்த சில நாட்களில், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த தடுப்பூசி, 70 - 80 சதவீதம் செயல்திறன் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், குறைந்த விலையில், இந்த தடுப்பூசியை வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், 'பைசர்' தடுப்பூசியின் ஒரு டோஸ், 1,300 ரூபாய் முதல், 1,400 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல், 'மாடர்னா' தடுப்பூசியின் ஒரு டோஸ், 2,704 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை ஒப்பிடும்போது, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி, குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. லாபம் இல்லாமல் விற்க, சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.குறைந்தபட்சம், ஒரு டோஸ், 200லிருந்து, அதிகபட்சமாக, 1,000 ரூபாய் வரை விற்கப்படும் என தெரிகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்