ஆச்சரியம் - கண்ணுக்குத் தெரியாத டிவி!
- Get link
- X
- Other Apps
அதென்ன கண்ணுக்குத் தெரியாத டிவி? டிவி கண்ணுக்கு தெரியாவிட்டால், பிறகு அதை எதற்கு வாங்கணும் என்கிறீர்களா?
பயன்படுத்தாதபோது, டிவி கண்ணுக்கு புலப்படாமல், 'இன்விஷிபிள்' ஆக மாறிவிடும். 'ஆன்' செய்தால், வழக்கமாக பார்ப்பது போல், டிவியை பார்க்கலாம்.
இப்படி ஒரு டிவியை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது, எல்.ஜி., நிறுவனம். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும், நுகர்வோர் மின்னணுவியல் கண்காட்சியான, 'சி.இ.எஸ்.,' நிகழ்ச்சியில் இது குறித்த முதற்கட்ட விளக்க காட்சியை எல்.ஜி., வெளியிடும் என தெரியவந்துள்ளது.
எல்.ஜி., ஸ்மார்ட் படுக்கையில், கால் இருக்கும் பகுதியில், கண்ணுக்குத் தெரியாத 'ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே' இருக்கும். ஒரு பட்டனை அழுத்தினால், இந்த திரை, படுக்கைக்குள் இருந்து வெளியே வரும்.
இது ஒரு, 'டிரான்ஸ்பரன்ட்' திரை என்பதால், பின்பக்கத்தில் இருப்பது எல்லாம் தெரியும். டிவியை ஆன் செய்தால் அவை மறைந்து, படம் தெரியும். ஆடியோவை பொறுத்தவரை, இந்த டிவிக்கு தனி ஸ்பீக்கர்கள் தேவைப்படாது. 'சினிமாடிக் சவுன்ட் ஓ.எல்.இ.டி., (சி.எஸ்.ஓ.,)' இதில் உள்ளது. அதனால், தனி ஸ்பீக்கர் இல்லாமல் ஆடியோ வரும்.
அடுத்தகட்டமாக, கண்ணை மூடினால் டிவி தெரியும்; காதை திருகினால் சேனல் மாறும் என்பது மாதிரி எதுவும் கண்டுபிடிப்பார்களோ என்னவோ!
ALSO READ : Best Games of 2021: 5 அற்புதமான Games வருகின்றன, தயாரா நீங்கள்?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment