நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Isha: பாறைநிலத்தையும் சோலைவனமாக்க முடியும் என்பதை உணர்த்திய சாதனை பெண்மணி

 குழந்தை வளர்ப்பிற்கான கல்வி பயின்றவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமிதம் கொள்கிறார்.குழந்தை மேம்பாட்டிலிருந்து விவசாயத்திற்கு மாறிய சாதனைப் பெண்மணி .


குழந்தை வளர்ப்பிற்கான கல்வி பயின்றவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமிதம் கொள்கிறார். நாகரத்தினம் வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவர். பெண்கள் விவசாயக்கூலித் தொழிலாளிகள் என்ற நிலையை மாற்றி அவர்களுக்கு விவசாயிகள் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது இந்த அமைப்பு எனப் பெருமை கொள்ளும் நாகரத்தினம் அவரது குடும்பம், விவசாயம் அவருக்கு அளித்துள்ள அங்கீகாரம், ஆரோக்யம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

என்னோட கணவர் ஒரு மருத்துவக் கல்லூரி பேராசிரியர். குழந்தைங்க பொறியியல் படிச்சவங்க. படிச்சது குழந்தைகள் வளர்ப்புங்கறதால அவங்களை கவனிச்சிக்கறது, அவருக்கு உதவறது இவ்வளவுதான் என்னோட உலகமா இருந்தது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கறது தொடங்கி வங்கி கணக்குவரைக்கும் எல்லாமும் அவரே கவனிச்சிப்பாரு. குழந்தைகள், சமையல், அவங்க கல்வி இதுதான் வாழ்க்கைன்னு இருந்துட்டு இருந்தேன்.

அப்பத்தான் எங்க மாமானாரோட பூர்வீக நிலம் 20 ஏக்கர் கைக்கு வந்தது. எல்லாரும் அதை வித்துரலாம்னுதான் சொன்னாங்க. எனக்கென்னமோ பூர்வீக பூமியை விக்க மனசுவரல. என் கணவரிடம் இதுகுறித்து சொன்னப்ப, சரி அப்பாகிட்ட பேசுவோம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்னு சொன்னாரு. பசங்களும் வளர்ந்துட்டதால நான் மாமனாருக்கு உறுதுணையா இருந்து அந்த நிலங்களை கட்டிக்காப்பத்தறது என முடிவெடுத்தாம் என்று 20 வருடத்திற்கு முன்பு தான் விவசாயியாக மாற முடிவெடுத்த கதையை விவரிக்கிறார் நாகரத்தினம்.

20 வருஷமா விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். பார்க்கறதுக்கு பெரிசா ஆளுங்க இல்ல, அதனால வெறும் தென்னை மட்டுமே பயிரிட்டோம். அதுக்கு சொட்டுநீர் பாசனம் வட்டமடைகட்டி நீர்பாசனம் அதுமட்டும்தான் தெரியும்.
ஏறக்குறைய 10-12 வருஷத்துக்கு பெரிசா ஒண்ணும் லாபம் பார்க்கமுடியலை. வரவுக்கு மீறிய செலவாயிடுச்சு. ஒருகட்டத்துல நிலத்த வித்திடலாமான்னுகூட யோசனை வந்துருச்சு. அப்பத்தான் ஈஷா விவசாய இயக்கத்து மூலமா பயிற்சிகள் நடத்தினாங்க. நம்ம மண்ணுக்கேத்த பயிர், அதற்கேத்த மகசூல் என படிப்படியா விவசாயம் கத்துக்கிட்டேன்.

ALSO READ : கிரீன் டீ நன்மைகள்

மரங்களுக்கு நடுவே காய்கறிகள், கொடிகள் போட்டேன். வாழை, தென்னை, பாக்கு, தேக்கு, மா, கொய்யா, மாதுளை என பல்வேறு மரங்கள்; கொத்தவரை, தக்காளி, அவரை, கத்தரி, வெண்டை, சுரக்காய் எனப் பல்வேறு காய்கறிகள்; பாகை, புடலை எனக் கொடிகள் என திரும்பினப் பக்கமெல்லாம், செடி, கொடி, மரம் என மொத்த இடமும் பூத்துக் குலுங்க ஆரம்பிச்சுடுச்சு.
மரங்களுக்கு நடுவே ஊடுபயிர் போடறது. இந்த மாட்டு சாணம், மூத்திரம், நாட்டுசக்கரை பயிர் கலந்த ஜீவாம்ருதம் போட்டு மலட்டு மண்ணை பூத்து, குலுங்கும் சோலைவனமா மாத்தறது போன்ற வித்தைகளைக் கத்துக்கிட்டேன்.

மண்ணை உழுவுற எந்த இயந்திரத்தையும் பயன்படுத்தறதில்ல. பச்சை மிளகாயும், புளிச்சமோரும் கலந்து தெளிக்கும் பூச்சிவிரட்டிதான். காய்களை சுத்தி கொஞ்சமா தட்டைப் பயிறு வச்சிருக்கேன். அதைத்தேடி வரும் நன்மைதரும் பூச்சிகள், காய்களை திங்கும் தீயபூச்சிகளை சாப்பிடறதால காய்கறிக்கு எந்த சேதமும் இல்லை. விதைநேர்த்தியாக்க பீஜாம்ருதம், வளர்ச்சி ஊக்கியாக ஜீவாம்ருதம், பயிரின் வேரை பாதுகாக்க அதன் காய்ந்த இலை, தழைகளைக் கொண்டு போடும் முடாக்கு மூலமாக எங்க மரம், செடி, கொடிகள் செழிச்சு வளருது.  நிலப்பகுதிக்கு உள்ளேயே குளம் எடுத்திருக்கோம். நாட்டு பசுமாடு 8 வச்சிருக்கோம். தன்னிறைவான ஒரு விவசாயமுறைக்கு மாறினதால, விக்க நினைச்ச இடத்துல இன்னிக்கு 4 குடும்பம் பொழைக்குது. அததவிர 20 பேருக்கு படியளக்கமுடியுது. எல்லாத்துக்கும் மேல மாசம் சராசரியா 50 ஆயிரம் ரூபா லாபம் பார்க்கமுடியுது எனக்கூறும் நாகரத்தினத்தின் கண்களில் வெற்றியின் பெருமிதம் தெரிகிறது.

ALSO READ : பரோட்டா பிரியர்களே உங்களுக்கு ஒரு அதிரடி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

இப்பல்லாம் எங்க நிலத்துல விளையற காய்மட்டும்தான் எங்களுக்கு உணவு. எந்த சீதன்ல எந்த பழம் விளையுதோ அதையே சாப்பிட்டுக்கறோம். எங்களுக்கு போக, மீதமுள்ளத உற்பத்தியாளர் நிறுவனம் மூலமா விற்பனை செய்திட்டு இருந்தோம். இப்ப, எங்க தோட்டத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு கடை போட்டு இருக்கோம். இயற்கை விவசாயத்தின் மூலமா எங்க விளையுற அத்தனை பொருட்களையும் அங்க விற்பனை செய்யறோம். மக்கள் தேடிவந்து  அவற்றை வாங்கிட்டு போயிடறாங்க என விவசாயத்தில் தன்முனைவோராக தான் வளர்ந்தவிதத்தையும், விவசாயம் எத்தகைய மதிப்புக்கூட்டலை, வருமானத்தை கொடுத்துள்ளது என்பதையும் எடுத்துரைக்கிறார் நாகரத்தினம். 

இப்ப எங்க போனாலும் பயமில்லாம பேசுவன். என்ன தேவையோ, அத அரசு நிறுவனத்துல, வங்கில எங்கயும் போய் சாதிச்சுட்டு வந்துடுவேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்கற எங்க உற்பத்தியாளர் நிறுவனத்தில 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறோம். விவசாயம் தாண்டிய எங்க பிரச்சனையையும் நாங்களே பேசி, தீர்வு காண முடியுது. சாதிச்சுட்டோங்கற உணர்வு இருக்குங்க என்றுகூறும் நாகரத்தினத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்று நமக்குள்ளும் பாய்கிறது.
விவசாயத்தின் மூலம் ஒரு நிலையான மேம்பட்ட வளர்ச்சியை எட்டியுள்ள நாகரத்தினம், விவசாயிகளே, விவசாயிகளுக்காக, என்ற நிலையை நாடெங்கும் உருவாக்குtதுதான் ஈஷா விவசாய இயக்கத்தின் லட்சியம் அதனை எட்டும் சீரிய பணியில் என்றும் உறுதியாக நிற்பேன் என்கிறார். 

சுத்தி மரம். திரும்பினப் பக்கமெல்லாம் பச்சைபசேலென செடி, கொடி, ஒய்யாரமாய் வளர்ந்து நிற்கும் பாக்கு, தென்னை, மா, கொன்றை, இன்னும் இன்னும் பசுமைம்படர்ந்த அந்த அடர்வனப் பகுதிக்குள் எங்கு பார்த்தாலும் மயில்கள் நடனமாடிக் கொண்டிருக்க, குயில் கூவ, காட்டுப்பறவைகளின் க்ரீச் க்ரீச் சத்தம். சிலநேரங்களில் தனது உணவிற்காக உள்நுழைந்த யானைகள் என்ற அந்த இயற்கை சூழ்வனத்திற்கு சொந்தக்காரர் நாகரத்தினம், ஒரு பெண் விவசாயி.

also read : உணவே மருந்து - உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!