நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பரோட்டா பிரியர்களே உங்களுக்கு ஒரு அதிரடி வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூர் தோசை கார்னர் என்ற பெயரில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே புதிய ஹோட்டலை செல்வம் என்பவர் திறந்திருக்கிறார். அங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா உண்ணும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நோட்டீஸ் அச்சடித்து அனைத்து பகுதிகளிலும் அந்தக்கடையின் உரிமையாளர் விநியோகம் செய்து வருகிறார்.
அந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மூன்று மணிக்குள், போட்டியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் பெயரை முன்பதிவு செய்து, டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை பரோட்டா உண்ணும் போட்டி நடைபெறும் என்றும் இதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பத்து நிமிடத்தில் 15 பரோட்டா சாப்பிடுபவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் தோல்வியுற்றவர்கள் சாப்பிட பரோட்டாவுக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி இந்தப் போட்டியில் நீங்களும் எவ்வித அசம்பாவிதங்களும் ஹோட்டல் நிர்வாகம் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாது என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்