நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

என்ன செஞ்சாலும் எடை குறையலையா... 7 நாளில் எடையை குறைக்க Military Diet ட்ரை பண்ணுங்க..!!

ராணுவத்தினரின் மிலிட்டரி டயட்டை பின்பற்றுவதன் மூலம் வெறும் 7 நாட்களில் 4-5 கிலோ எடையைக் குறைக்கலாம், 
உடல் எடையை குறைக்க நிறைய முயற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் பாடாய் படுத்தும் . அத்தகையவர்கள் மிலிட்டர் டய்ட் உதவியுடன் ஒரு வாரத்தில் 4.5 கிலோ எடையை நீங்கள் குறைக்கலாம்.

இந்த உணவு முறை நாட்டின் வீரர்களுக்கானது

இந்த மிலிட்டரி டயட், அதாவது இராணுவ உணவு நாட்டின் வீரர்களுக்காக பிரத்தியேகமாக சிறந்த ஊட்டச்சத்து நிபுணர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்தில், ஜவான்கள் தங்கள் எடையைக் குறைக்கும் இலக்கை அடையலாம். இந்த உணவின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், அதில் மிகவும் விலையுயர்ந்த கூடுதல் பொருட்கள் இல்லை. இந்த உணவு மிகவும் சிக்கனமானது. அதைப் யாரும் பின்பற்றலாம்.

எடை இழப்புக்கு டயட் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே, இராணுவ உணவு இந்த வழியில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவில், நபர் வாரத்தின் 3 நாட்களில் குறைந்த கலோரி ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டியிருக்கும், மீதமுள்ள 4 நாட்கள் இந்த உணவு முறையை பின்பற்ற வேண்டியதில்லை. 

நீங்கள் உடல் எடையை குறைக்கும் வரை இந்த உணவை பின்பற்ற வேண்டும்.

1. இந்த உணவின் சிறப்பு என்னவென்றால், இது உங்கள் உடலின் கொழுப்பை எரிக்கிறது மற்றும் மெட்டபாலிஸத்தை, அதாவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் எடையை எளிதில் குறைக்கிறது.

2. நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் இந்த உணவில் முறையை பின்பற்றும் போது, ​​நீங்கள் 1300 முதல் 1500 கலோரிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உடல் எடையை குறைப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, கார்போ ஹைட்ரேட்டின் அளவை மிகக் குறைவாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

3. இந்த உணவில் நீங்கள் குளிர்ந்த பானங்கள், பழம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டியதில்லை, இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவில், நீங்கள் அதிகபட்ச மாக திரவ உணவை உட்கொள்ள வேண்டும்.

4. நீங்கள் இராணுவ உணவைப் பின்பற்றுகிறீர்கள் என்றால், 20 நிமிடங்கள் நடந்தால் போதும், நீங்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

இராணுவ உணவு, மிலிட்டரி டயட்டின் டயட் சார்ட்

முதல் நாள்

காலை உணவில் 1/2 கப் திராட்சை, 1 பிரட் டோஸ்ட் ஸ்லைஸ், 2 டீஸ்பூன் பீனட் பட்டர் மற்றும் சர்க்கரை இல்லாமல் தேநீர் அல்லது காபி ஆகியவை அடங்கும்.

மதிய உணவு 1/2 கப் மீன், 1 பிரட் துண்டு, காபி அல்லது தேநீர்

இரவு உணவில் ஏதேனும் இறைச்சியின் 2 துண்டுகள், 1 கப் பச்சை பீன்ஸ், 1/2 வாழைப்பழம், 1 சிறிய ஆப்பிள் மற்றும் 1 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஆகியவை அடங்கும்

இரண்டாம் நாள்

காலை உணவில் 1 முட்டை, 1 பிரட் டோஸ்ட் துண்டு, 1/2 வாழைப்பழம்

மதிய உணவில் 1 கப் பாலாடைக்கட்டி அல்லது 1 துண்டு செட்டார் சீஸ், 1 வேகவைத்த முட்டை, 5 உப்பு பிஸ்கெட்டுகள்

இரவு உணவில் 2 ஹாட் டாக், 1 கப் ப்ரோக்கோலி, 1/2 கப் கேரட், 1/2 வாழைப்பழம் மற்றும் 1/2 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் அடங்கும்

மூன்றாம் நாள் 

காலை உணவு 5 பிஸ்கெட்டுகள், 1 துண்டு செட்டார் சீஸ், ஒரு சிறிய ஆப்பிள்

ஒரு வேகவைத்த முட்டை, மதிய உணவில் 1 பிரெட் துண்டு

இரவு உணவு: 1 கப் மீன், 1/2 வாழைப்பழம், 1 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்

(குறிப்பு- நீங்கள் 1 மாதத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் இந்த டயட் டார்ட்டைப் பின்பற்ற வேண்டும். மீதமுள்ள நான்கு நாட்களுக்கு 1300 முதல் 1500 கலோரிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மேலும் 20 நிமிட தினசரி நடை அவசியம்.)


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்