நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜெயலலிதாவுடன் செல்ஃபி எடுக்கலாம்; பேசலாம்: நவீன வசதிகளுடன் உருவான நினைவிடம்!

ஜெயலலிதா நினைவிடத்தில் என்னென்ன அம்சங்கள்!
ஜெயலலிதாவுடன் நேரடியாகப் பேசலாம், புகைப்படம் எடுக்கலாம் என்ற வகையில் அவரது நினைவிடத்தில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவகம் கட்டப்பட்டது. இந்த நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, சாதனை குறித்து நினைவகத்தின் இடது பக்கத்தில் அருங்காட்சியகமும் வலது பக்கத்தில் அறிவுத்திறன் பூங்காவும் கட்டப்பட்டுள்ளது.
இதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை நேற்று திறந்து வைத்தார்.

புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியத்திற்கு உள்ளே சென்றவுடன் ஜெயலலிதா உண்மையாகவே நின்று கொண்டிருப்பது போன்று சிலிகானில் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஜெயலலிதாவின் குழந்தை பருவம் முதல் இறக்கும் முன் வரையிலான புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியத்தில் ஹைலைட் என்னவென்றால்,

ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற வகையிலான தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள, தொடுதிரையில் நாம் தேர்வு செய்யும் கேள்விக்கு, ஜெயலலிதாவே நேரில் வந்து பதில் அளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிவுசார் பூங்கா குறித்து பார்க்கும்போது, டிஜிட்டல் திரையில் ஜெயலலிதாவுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். பின்னர் அங்கிருக்கும் கணினியில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் ஜெயலிதாவுடன் எடுத்த செல்ஃபி நம் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சைக்கிளிங் செய்துகொண்டே 2D அனிமேஷனில், ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்கள் குறித்து தெரிந்துகெள்ள முடியும். மேலும் ஜெயலலிதாவுக்கு டிஜிட்டல் முறையில் மலர் அஞ்சலி செலுத்தவும் முடியும். அப்போது நாம் தேர்வு செய்யும் மலர் 2டி திரையில் தோன்றும். ஜெயலலிதா உருவத்தின் மீது உதிர்வதோடு அப்பூவின் வாசனை நம்மை நிஜத்தில் உணரச்செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாக இன்றைய காலத்திற்கு ஏற்ப ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சியகமும், அறிவுசார் பூங்காவுடன் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், இன்னும் ஜெயலலிதாவின் நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!