நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாதி ஆண்; பாதி பெண்; இது அதிசயத்திலும் அதிசயம்- கேமராவில் சிக்கிய அரியவகை சிவப்புக்குருவி!

பாதி ஆண்குருவி போலவும், மறுபாதி பெண் குருவி போலவும் தென்பட்ட அரிய வகை கர்தினால் குருவியை புகைப்படக்காரர் தன்னுடைய கேமராவில் க்ளிக் செய்துள்ளார்.
கர்தினால் என்பது தென் அமெரிக்கப் பறவை ஆகும். இது சிவப்புக்குருவி என அழைக்கப்படுகிறது. இப்பறவை கனடா, கிழக்கு ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இந்த வகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பாகவும், பெண் குருவி சாம்பல் நிறத்திலும் இருக்கும்.
ஆனால் 10 லட்சத்தில் ஒரு பறவை அரியவகையாக ஆணும், பெண்ணும் கலந்ததுபோல காட்சியளிக்கும். அதாவது ஒரு பாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். இந்த அரியவகை பறவையை காண்பது மிகவும் கடினம். ஆனால் அப்படி ஒரு அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் கிராண்ட் வேலி பகுதியில் அரியவகை சிவப்புக்குருவியை கண்டுள்ளார் பறவை ஆர்வலர் ஜேம்ஸ் ஆர் ஹில். 48 வருடங்களாக பறவை குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறேன். ''என் கண்ணில் இந்த அரியவகை சிவப்புக்குருவி தென்பட்டதே இல்லை. இது வழக்கத்திற்கு மாறான அழகு. இது வாழ்க்கையில் ஒருமுறையே கிடைக்கும் வாய்ப்பு'' எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!