நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய்… தோசைக்கு சட்னி இப்படி செய்து பாருங்க!

சாம்பார் வெங்காயம் அல்லது உல்லி அல்லது சின்ன வெங்கயம் என்று அழைக்கப்படும் இந்த வெங்காயத்தில் தோசைக்கு சட்னி செய்து சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும்.
நீங்கள் வீட்டில் தயார் செய்யும் தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று குழம்பி இருப்பீர்கள். ஆதலால் தோசை ஒரு புறம் தயார் செய்யும் போதே, மறுபுறம் இங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள சட்னியை தயார் செய்யலாம். அதும் ரொம்ப ஈஸியான செய்முறையில்.  

சின்ன வெங்காய சட்னி: 

சாம்பார் வெங்காயம் அல்லது உல்லி அல்லது சின்ன வெங்கயம் என்று அழைக்கப்படும் இந்த வெங்காயத்தில் தோசைக்கு சட்னி செய்து சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். இந்த சின்ன வெங்காய சட்னிக்கு தேவையான பொருட்கள் பின்வருமாறு 

தேவையான பொருட்கள்:

2 கப் – வெங்காயம், உரிக்கப்பட்டு தோராயமாக நறுக்கப்பட்டவை

4-5 – உலர்ந்த சிவப்பு மிளகாய்

1 டீஸ்பூன் – தேங்காய் எண்ணெய்

உப்பு தேவையான அளவு 

நீங்கள் செய்ய வேண்டியவை:

ஒரு பாத்திரத்தில் பாதியளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி பாத்திரத்தை சூடாக்க வேண்டும். பாத்திரம் சூடானதும், வெங்காயத்தை அதில் போட்டு, அடுப்பின் சுடரை குறைத்து வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் சிவப்பு மிளகாயைச் சேர்த்து, இரண்டும் சுருங்கி பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதற்கு குறைந்தது 15 நிமிடங்கள் ஆகும். 

வெங்காயம் பழுப்பு நிறமாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருந்தபின், அடுப்பின் சுடரை அணைத்து, அறை வெப்பநிலைக்கு கொண்டு வர வேண்டும். அதன் பின் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, பேஸ்ட் போல் வரும் வரை அரைக்க வேண்டும். பின்னர் மீதமுள்ள தேங்காய் எண்ணெயுடன் சட்னியின் மேல்புறம் ஊற்றி, நீங்கள் ஒரு புறம் சூடாக சுடும் தோசைகளுடன் சேர்த்து உண்ணலாம். 

இந்த சட்டினியில் தேங்காய் எண்ணெய் முற்றிலும் தேவைப்படும் ஒரு பொருளாகும். ஏனெனில் இது சட்னியின் ஒட்டுமொத்த சுவையை அதிகரிக்கிறது. இந்த சட்னியில் பலர் சிறிதளவு புளியும் சேர்க்கிறார்கள். நீங்கள் விரும்பினால், இதில் சிறிதளவு கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்