நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

,உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ -கோவையில் தமிழில் திருக்குறளை கூறி விளக்கமளித்த பிரதமர் மோடி

கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறளைக் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக ஆளூனர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்றனர். கோவை கொடிசியா அரங்கில் 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார். அப்போது பேசிய அவர், ‘நான் கோயம்புத்தூருக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். கோயம்புத்தூர், தொழிற்நகரம். புதுமைகளைப் படைக்கும் நகரம். இன்று நாம் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அது கோயம்புத்தூருக்கும், தமிழகத்துக்கும் பலனளிக்கும். இன்று தொடங்கிவைக்கப்பட்ட பவானி சாகர் திட்டத்தினால் குறிப்பாக திருப்பூர், கோயம்புத்தூருக்கு பலன்பெறும்.

இந்த திட்டம் விவசாயிகளுக்கு பெரும் பலனிக்கும் இந்த நேரத்தில் வான்புகழ் வள்ளுவனின் குறள் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. உழவு குறித்து திருவள்ளுவர்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்’ என்று திருக்குறளைக் கூறினார். பின்னர், அந்த திருக்குறளுக்கு உரிய விளக்கத்தையும் அவர் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றிவருகிறது. தொழிற்துறை வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று தடையில்லாத மின்சாரம். நாட்டிற்கு இரண்டு முக்கிய மின்திட்டங்களை அர்பணிப்பதிலும், முக்கிய மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதிலும் நான் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். தமிழ்நாட்டுக்கு மிகப்பெரும் நன்மை பயக்கும் வகையில் நெய்வேலியில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் திட்டம் 7,800 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதில், உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவீதத்துக்கு அதிகமாக தமிழ்நாட்டுக்கே வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!