நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வீட்டை அப்படியே வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியுமா.. ஆம் என்கிறார் Phil Joy..!

அமெரிக்காவில் 139 ஆண்டு பழைய விக்டோரியன் ஹவுஸ் என்ற 2 மாடி கட்டிடத்தை வண்டியில் கட்டி வேறொரு இடத்திற்கு இழுத்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: 

அமெரிக்காவில் 139 ஆண்டு பழைய விக்டோரியன் ஹவுஸ் என்ற 2 மாடி கட்டிடத்தை வண்டியில் கட்டி வேறொரு இடத்திற்கு இழுத்து சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

139 ஆண்டுகள் பழமையான விக்டோரியன் ஹவுஸ் என்ற இரண்டு மாடி கட்டிடத்தை மிகப்பெரிய சக்கரங்களில் ஏற்றப்பட்டு, புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது.

அமெரிக்காவில் (America) இந்த ஹவுஸ் மூவவிங் பணியை மேற்கொண்ட பில் ஜாய், இதற்காக 15 க்கும் மேற்பட்ட நகர நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்று கூறினார். இந்த நடவடிக்கை மிகவும் நுட்பமானது என்று ஜாய் கூறினார், ஏனெனில் முதலில் கட்டிடத்தை பூமியில் இருந்து பெயர்க்க வேண்டும்

பிப்ரவரி 21, 2021 ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோ வழியாக ஒரு டிரக் மூலம் விக்டோரியன் ஹோம் என்ற 139 ஆண்டு பழைய கட்டிடத்தை இழுத்து செல்வதை பலர் ஆர்வமுடம் வேடிக்கை பார்த்தனர். 1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, குடியிருப்பு ஒன்றை கட்ட இடம் கொடுக்கும் வகையில், ஆறு ப்ளாக்குகள் தொலைவில் ஒரு புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது

சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு மாடி விக்டோரியன் வீடு ஞாயிற்றுக்கிழமை புதிய முகவரிக்கு மாற்றப்பட்டது. விவரங்களின்படி, 807 பிராங்க்ளின் ஸ்ட்ரீட்டில் 139 ஆண்டுகள் பழமையான வீடு புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு ஏறக்குறைய, $200,000 டாலர் செலவானது என கூறப்படுகிறது

பெரிய ஜன்னல்கள் மற்றும் பழுப்பு நிற முன் கதவு கொண்ட இத 139 ஆண்டு கால பழையான வீட்டை, ஆறு ப்ளாக்குகள் தொலைவில் உள்ள புதிய முகவரிக்கு எடுத்து செல்ல மாபெரும் சக்கரங்களில் ஏற்றப்பட்டது.

மணிக்கு சுமார் 1 மைல் என்ற வேகத்தில் நகர்ந்த இந்த வீட்டை பார்க்க மக்கள் நடைபாதையில் கூடி புகைப்படம் எடுத்தனர்

வீட்டை கொண்டு செல்லும்வழியில், பார்க்கிங் மீட்டர்கள், போக்குரத்து விதி தொடர்பான போர்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்